AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

செவ்வாய், 11 செப்டம்பர், 2012

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? பேரூராட்சி செயல் அலுவலர்கள் ஆய்வு


காட்டுமன்னார் கோவில், செப்.11-
காட்டுமன்னார் கோவில், லால்பேட்டை பகுதிகளில் உள்ள கடை களில் தடை செய்ய ப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என பேரூராட்சி செயல் அலுவலர்கள் ஆய்வு செதனர்.
பிளாஸ்டிக் பொருட்கள் தடை
கடலூர் மாவட்டம் காட்டு மன்னார் கோவில் பேரூராட் சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்து கிறார்களா? என பேரூராட்சி செயல் அலுவலர் பால சுப்பிர மணியன் மற்றும் அலுவலர்கள் அனைத்து கடை களிலும் ஆய்வு செய்த னர்.அப்போது கடை உரிமையாளர்கள் பிளாஸ்டிக் பொருட்களை மாவட்ட நிர்வாகம் தடை செய்த பின்னர் நாங்கள் பொருட்களை விற்பனை செய்யும் போது பிளாஸ்டிக் பைகளை உபயோகப்படுத்து வது இல்லை.
பொதுமக்கள் விழிப்புணர்வு தேவை
மேலும் பொருட்கள் வாங்க வருகின்ற பொதுமக்களிடம் துணி பைகள் எடுத்து வருவது இல்லை. பிளாஸ்டிக் பைகள் கேட்கிறார்கள். தடை செய்யப்பட்ட பொருள் என்று கூறினாலும் ஏற்க மறுப்ப தில்லை.தாங்கள் வாங்கும் பொருட்களை கேரி பேக்கில் கொடுங்கள் என்று கூறுகி ன்றனர்.இதனால் விற்பனை குறைந்து விடுகிறது.அதனால் பொதுமக்களிடம் பிளாஸ் டிக்கினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படு த்த வேண்டும்.என செயல் அலுவலரிடம் கடை உரிமை யாளர்கள் கூறினர். அதைய டுத்து டீ கடைகளில் ஆய்வு செய்த அவர்கள் பிளாஸ்டிக் கப்புகள் உபயோகப்படுத்தக் கூடாது.அறிவுரை கூறி னர்.
மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
அதேபோல் லால்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் திருஞான சம்பந்தம் மற்றும் அதிகாரிகள் லால்பேட்டை பகுதிகளில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின் றதா? என ஆய்வு செய்தார்.
மேலும் வரும் 15-ந்தேதிக்குள் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் உபயோக படுத்த தடை செய்யப் படுகிறது என மாவட்ட நிர்வாகம் அறிவித்து ள்ளது.மேலும் காட்டுமன்னார் கோவில்,லால்பேட்டை பகுதிகளில் பிளாஸ்டிக் பொரு ட்களை பயன் படுத்தினால் அபராதம் விதிக்கப்படும்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக