AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

செவ்வாய், 11 செப்டம்பர், 2012

ஆட்சியர் அறிவிப்பு சம்பா சாகுபடிக்கு பல்வேறு திட்டங்கள்

கடலூர் மாவட்டம் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்ட சம்பா நெல் சாகுபடி விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ விடுத்துள்ள  செய்திக்குறிப்பு: 
கடலூர் மாவட்டத்தில் காவிரி வடிநில பகுதிகளான சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டங்களில் பாசனத்திற்காக தண்ணீர் பெறுவதற்கு முன் காலம் கருதி விவசாய நடவடிக்கைகளை துவங்குவது இன்றியமையாததாகிறது.  நேரடி நெல் விதைப்பு செய்யும் பகுதிகளில் உழவுப் பணி மேற்கொள்ள ஹெக்டேருக்கு மான்யமாக ரூ.600, விதைப்பு மற்றும் உரமிடும் கருவிகளை பயன்படுத்தும் போது அவற்றின் வாடகை தொகையில் 50 சதவிதமானியமும், களைகளை நீக்குவதற்கு ஹெக்டருக்கு 2.5 லிட்டர் களை கொல்லி மருந்துகள் ரூ.500 மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளது. இது போன்று சமுதாய நாற்றங்கால் அமைக்கும் விவசாயிகளுக்கு சான்று பெற்ற நெல் விதை கிலோவிற்கு ரூ.20 வீதம் 500 கிலோவிற்கு ரூ.10 ஆயிரம் முழு மானியம் வழங்கப்படும். மேலும் சாகுபடி செலவிற்கு ஹெக்டேருக்கு ரூ.30 ஆயிரம் ஊக்கத் தொகையாக ரூ.7,500 வழங்கப்படும். நடவு பயிருக்கு அடி உரமாக இட வேண்டிய ரசாயண உரங்களின் விலையில் 25 சதவீதம் அல்லது ரூ.1,125 வழங்கப்படும். விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக வழங்கப்படும்.  மேலும் ஜிப்சம், சிங்க் சல் பேட் நுண்ணூட்ட கலவை இவற்றில் ஏதேனும் ஒன் றுடன் உயிர் உரங் களையும் சேர்த்து 75 சத மானியத்தில் வழங்கப்ப டும். எனவே கடலூர் மாவட்டத்தில் காவிரி வடி நில வட்டங்களில் சம்பா நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி உணவு உற்பத்தியை மேம்படுத்த கேட்டு கொள்ளப்படுகிறது. இது தொடர்பாக   அருகிலுள்ள வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலர் களை தொடர்பு கொள்ளவும்.இவ்வாறு  செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக