AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

இரண்டு ரியால் மட்டுமே வரதட்சணை பெற்று சவூதி பெண் புரட்சி..

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளில் திருமணத்தின் போது மணமகனுக்கு வரதட்சணையாகப் பெரும்தொகை தரவேண்டியிருக்கிறது. இதனால் ஏழை குமரிகள் கல்யாணச் சந்தையில் விலைபோகாமல் வரதட்சணை என்பது இந்நாடுகளில் பெரும் சமுதாயத் தீமையாக உள்ளது, 

சவுதி துபாய் பஹ்ரைன் போன்ற இஸ்லாமிய நாடுகளில் இதற்கு மாற்றமாக மணப்பெண்ணுக்கு மணமகன் தட்சணை
கொடுக்க வேண்டியுள்ளது. மணப்பெண்ணுக்குக் கொடுக்கப்படவேண்டிய இந்த தட்சணை (மணக்கொடை) அரபு மொழியில் மஹர் என்றும் குறிப்பிடப்படுகிறது,

அரபியப் பெண்கள் தங்களின் மணாளரிடமிருந்து அதிக அளவில் மணக்கொடை கோருவதால், அரபிய ஆண்கள் திருமணம் செய்துகொளதில் சிரமம் கொண்டு எகிப்து, மொரோக்கோ, போன்ற குறைவான மணக்கொடை கோரும் நாட்டுப் பெண்களையும், இந்தியா, பாகிஸ்தான், பொன்ற பெண்ணுக்கான மணக்கொடை வழக்கிலில்லாத நாட்டு மணப்பெண்களையும் திருமணம் செய்து கொள்ள நாடுகின்றனர். மேலும், திருமணத்திற்காக சவுதி அரேபிய போன்ற அரசுகள் திருமணமாகாத வாலிபர்களுக்கு கடனுதவித் திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி வருகின்றன,
இந்நிலையில், மணப்பெண்கள் வரதட்சணைத் தொகையைக் குறைத்துக் கேட்கும் வகையில் விழிப்புணர்ச்சிப் பிரசாரங்கள் நடைபெற்று வருகின்றன. சவூதி மணப்பெண் ஒருவர் தான் மணக்க விரும்பிய மணமகனிடம் வெறும் இரண்டு ரியால்கள் மட்டுமே மணக்கொடையாகப் பெற்று புரட்சி செய்துள்ளார்.

வாலிபர் ஒருவருக்கு தன் மகளை மணமுடித்து வைத்த அப்பெண்ணின் தந்தை சவூதி விமானப் படையின் ஓய்வு பெற்ற ஊழியர் ஆவார்.

செய்தியாளர்களிடம் பின்னர் பேசிய அந்தத் தந்தை அப்துல் ஹக்கீம் அப்துல் ஹத்தாத் "குறைவாக மணக்கொடை பெறுவதே நபிவழியாகும் - அப்படிச் செய்வதன் மூலமே சமூகத்தில் திருமணச்சந்தையில் நிலவும் ஏற்றத் தாழ்வைப் போக்க முடியும்; எவ்வளவு மணக்கொடை பெறுகிறோம் என்பதல்ல, எவ்விதம் வாழ்கிறோம் என்பதில் தான் வாழ்வின் வெற்றி இருக்கிறது என்று கூறினார். "பெண்கள் கோரும் மணக்கொடை ஒரு அடையாளமாகத் தான் பார்க்க வேண்டும் " என்றும் அவர் சொன்னார்.

சாதரணமாக சவூதியில் திருமணத்தின் போது மணக்கொடையாக சுமார் 30,000 ரியால்கள் வரை மணப்பெண்ணுக்கு மணம் முடிக்க விரும்பும் வாலிப வழங்கவேண்டியுள்ளது குறிக்கத் தக்கது. 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக