AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

சனி, 29 செப்டம்பர், 2012

கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து 3-வது நாளாக மழை


கடலூர் மாவட்டத்தில் கடந்த 26, 27-ந் தேதிகளில் பரவலாக மழை பெய்தது. நேற்று 3-வது நாளாகவும் மழை நீடித்தது. கடலூர், நெல்லிக்குப்பம், விருத்தாசலம், சிதம்பரம், புவனகிரி உள்பட பல்வேறு பகுதிகளிலும் நேற்று மாலை சுமார் 1 மணி நேரம் மழை பெய்தது. கடலூர் பகுதியில் இரவு முழுவதும் விட்டு விட்டு மழை தூறியது. காட்டுமன்னார் கோவிலில் 2 மணி நேரம் பெய்த கன மழைக்கு கும்பகோணம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வேரோடு புளியமரம் சாய்ந்தது.
அதேபோல் விழுப்புரம் மாவட்டத்திலும் தொடர்ந்து 3-வது நாளாக நேற்று மழை பெய்தது. விழுப்புரத்தில் இரவில் 7 மணி முதல் 10 மணி வரை கனமழை நீடித்தது. உளுந்தூர்பேட்டை, திண்டிவனம், கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், செஞ்சி, திருக்கோவிலூர், மரக்காணம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. திருவெண்ணைநல்லூர், அரசுசூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று மாலை 5 மணி முதல் இரவு 11 மணிவரை விட்டு விட்டு கனமழை கொட்டியது. 3 நாட்களாக பெய்த தொடர் மழை, பலத்த காற்றால் இந்த பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 2 ஆயிரம் ஏக்கர் கம்பு பயிர் சாய்ந்து நாசமடைந்தது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக