காட்டுமன்னார்குடி,செப்-14
/
லால்பேட்டை தமுமுக அலுவலகத்தில் 09 -09 -2012 ஞாயிறு மாலை 4 மணியளவில் காட்டுமன்னார்குடியில் மருத்துவமனை நடத்தி வரும் பாண்டியன் பிள்ளை மகன் டாக்டர் ராமச்சந்திரனின் தூண்டுதலினால் அவரின் அடியாட்களாக செயல்படும் சமூக விரோதிகள் சிலர் தமுமுக அலுவலகத்தில் நுழைந்து அங்குள்ள பொருட்களை சேதம் படுத்தியும் அங்கு இருந்த வர்களின் மீது ஆயுதங்களால் தாக்க முயற்சித்தனர்.
இப்பிரச்சினையில் சம்பந்தப்பட்ட டாக்டர் ராமச்சந்திரன் ,அவரது தம்பி பாலச்சந்திரன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு தொடரப் பட்ட நிலையில் கைது நடவடிக்கையில் காவல் துறை மொத்தன போக்கை கடைபிடித்தது இவற்றை கண்டித்து 10.09.2012 மாலை லால்பேட்டை கைக்காட்டியில் லால்பேட்டை முஸ்லிம் ஜமாஅத் சார்பில் சாலை மறியல் செய்து குற்றவாளிகளை கைது செய்ய வலியுரத்தப்பட்டது.
இது வறை குற்றவாளிகள் கைது செய்யப்படாததால் இன்று வெள்ளிகிழமை மலை காட்டுமன்னார்குடி காவல்நிலையத்தை முற்றுகையிட்டு த.மு.மு.க சார்பில் போராட்டம் நடைபெற்றது.
இவ்வழக்கில் சம்பத்தப் பட்டவர்களை உடனடியாக கைது செய்யக் கோரி கண்டன கோசங்கள் ஓங்கின இந்நிலையில் குற்றவாளிகளை ஓரிரு நாட்களில் கைது செய்வதாக காவல்துறையினர் உறுதி அளித்ததின் பேரின் போராட்டம் முடித்து மக்கள் கலைந்து சென்றனர் .
thank lalpet.net
0 கருத்துகள்:
கருத்துரையிடுக