AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

மஸ்ஜிதுல் அக்ஸா:ஜும்ஆ தொழுகையில் 3.5 லட்சம் முஸ்லிம்கள் பங்கேற்பு!


ஜெருசலம்:இஸ்லாத்தில் மூன்று முக்கிய புனித மஸ்ஜிதுகளில் ஒன்றான மஸ்ஜிதுல் அக்ஸாவில் ரமலானின் நான்காவது வெள்ளிக்கிழமையன்று மூன்றரை லட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் ஜும்ஆ தொழுகையில் பங்கேற்றனர்.
இஸ்ரேலின் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறி லட்சக்கணக்கான மக்கள் பரிசுத்தமான மஸ்ஜிதில் நடந்த ஜும்ஆவில் கலந்துகொண்டனர்.
மஸ்ஜிதுல் அக்ஸாவில் ஜும்ஆ உரை நிகழ்த்திய இமாம் தனது உரையில் கூறியது: ‘ஃபலஸ்தீன் மற்றும் புனித மஸ்ஜிதான மஸ்ஜிதுல் அக்ஸாவை விடுவிப்பது உலக முஸ்லிம்களின் கடமையாகும். இவற்றின் பாதுகாப்பு என்பது உலக முஸ்லிம்களின் நம்பிக்கையில் உட்பட்டதாகும். எல்லா வேற்றுமைகளையும் மறந்து முஸ்லிம்கள் ஒன்றிணைந்து குத்ஸின் விடுதலைக்காக பாடுபட வேண்டும்’ என கூறினார்.
மஸ்ஜிதுல் அக்ஸா மற்றும் குப்பத்துஸ்ஸுஹ்ராவின் முற்றங்கள் ஆண்கள் மற்றும் பெண்களால் நிரம்பி வழிந்தன. ஜும்ஆ தொழுகைக்கு பிறகு ஃபலஸ்தீன் மற்றும் இதர நாடுகளில் உயிர் தியாகம் புரிந்த முஸ்லிம்களுக்கு ஜனாஸா தொழுகையும்(இறந்தவர்களுக்கான பிரார்த்தனை) சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்றன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக