AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

வியாழன், 24 மே, 2012

புனித ஹஜ் பயணத்திற்கு திருச்சியி​லிருந்தும் விமானம் ஹஜ் மாநாட்டில் எம்.அப்துர் ரஹ்மான் எம்.பி கோரிக்கை


மானியம் என்ற பெயரால் புனித ஹஜ் பயணத்திற்கு வழங்கப் படும் விமான கட்டண சலுகை ஆயுளில் ஒரு முறை வழங்கப்பட வேண்டும் என்றும், புனித ஹஜ் பயணத்திற்கு திருச்சியிலிருந்து விமான இயக்கப்பட வேண்டும் என்றும் காயிதே மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளர் எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மத்திய ஹஜ் குழுவின் சார் பில் ஹஜ் தொடர்பான மாநாடு டெல்லி- வித்தியான் பவனில் மே 22 செவ்வாய் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடை பெற்றது.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஹஜ் குழு தலைவர், முஹ்சினா கித்வாய் துணைத்தலைவர் அபூபக்கர், இந்தியாவிற்கான சவூதி அரேபியா தூதர் அலி ஆசிப் ராவ், மும்பை ஹஜ் கமிட்டி-முதன்மை நிர்வாக அலுவலர் ஜாகிர் உசேன், தமிழக ஹஜ் கமிட்டி செயலாளர் அலாவுதீன் ஐ.ஏ.எஸ்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கேரள மாநில பொதுச் செயலாளர் இ.டி.முஹம்மது பஷீர் எம்.பி,.காயிதே மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளர் எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஹஜ் குழு உறுப்பினர் கள், அலுவலர்கள், உலமா பெரு மக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் மாநாட்டில் கலந்து கொண்டனர்.
இம்மாநாட்டில் எம்.அப்துர் ரஹ்மான் பேசியதாவது:
ஹஜ் மானியம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித் ததற்கு பின் இந்த கலந்த ஆலோசனை மாநாடு நடைபெரு கிறது. புனித ஹஜ் பயணத்திற்கு வழங்கப்படுவது மானியம் அல்ல, அது விமான கட்டண சலுகை அது தொடர்ந்து நீடிக்க வேண்டும்.
இதில் மத்திய அரசு உறுதி யாக இருக்க வேண்டும் இந்த சலுகை ஆயுளில் ஒரு முறையே பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.
தனியார் ஹஜ் பயண ஏற் பாட்டாளர்கள் சிலர் முறைகேடு களில் ஈடுபடுவதால் புனித ஹஜ் பயணிகள் பலர் ஏமாற்றப் படுவதாக கடந்த ஆண்டில் தகவல் வந்தன. புனித பயணத் திற்கு எண்ணம் கொண்டு அனைத்து ஏற்பாடுகளும் செய்து விட்டு உற்றார் உறவினர் களிடம் சொல்லிவிட்டு நூற் றுக்கணக்கான மையில் பயணம் செய்து வந்த பின் சவூதி செல்ல வேண்டிய நேரத்தில் உங்களுக்கு அனுமதி கிடைக்க வில்லை என்று அவர்களிடம் சொன்னால் மன நிலை எப்படி இருக்கும். ஊருக்கு கூட திரும்பி செல்ல முடியாமல் வெட்கப்பட்டு வேதனைப்பட்டது கடந்த காலத்தில் நடைபெற்றது.
இதனை தடுப்பதற்கு பிரத் யோக ஏற்பாடு செய்ய வேண்டும் இதற்காக படிவங்கள் அச்சிடப் பட்டு பெயர்,பாஸ்போட் எண் உள்ளிட்ட தகவலோடு 50 அல் லது 100 என தனியார் ஹஜ் பயண ஏற்பாட்டாளருக்கு வழங்கி அதைவிட அதிகபடி யான எண்ணிக்கை அவர்கள் பெறாமல் இருப்பதற்கும் பெறப் பட்ட படிவங்களை தவறாக பயன்படுத்த இருப்பதற்கும் இதன் மூலம் உறுதி செய்யப் படும். திருச்சியிலிருந்து விமானம்
புனித ஹஜ் பயணத்திற்கு தமிழ் நாட்டில் சென்னையிலி ருந்து மட்டுமே விமானம் இயக் கப்படுகிறது. தென் மாவட்டங் களிலிருந்து அதிக எண்ணிக் கையில் ஹஜ் பயணிகள் பய ணிப்பதை கருத்தில் கொண்டு திருச்சியில் இருந்தும் விமானம் இயக்கப்படவேண்டும் அதன் மூலம் தென் மாவட்ட மக்கள் மிகுந்த பயன் அடைவார்கள்.
ஹஜ் நல்லெண்ண தூதுக் குழு தொடர்ந்து அனுப்பப் படவேண்டும். அதில் இடம் பெறக்கூடியவர்களை சரியான முறையில் தேர்வு செய்ய வேண் டும்.
இந்த தூதுக்குழுவின் நோக் கம் நமது நாட்டின் நன்றி விசு வாசம் அத்துடன் சவூதி அர சுக்கு வாழ்த்துக்களை தெரி விப்பதோடு ஹஜ்ஜுக்கு இந்தி யாவில் இருந்து செல்பவர் களின் பிரச்சனை தெரிந்து அதனை தீர்த்து வைக்க கூடியதும் ஆகும்.
எனவே நல்லெண்ண குழு தேர்ந்தெடுப்பது தொடர்பாகவும் புதிய வழிகாட்டின் நெறிமுறை களை அரசு வகுக்க வேண்டும்.
இவ்வாறு எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி.குறிப்பிட்டார்..

0 கருத்துகள்:

கருத்துரையிடுக