AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

வெள்ளி, 10 பிப்ரவரி, 2012

10.02.2012 அன்று துபையில் சகோதரர் கோவை அய்யூப் சிறப்புச் சொற்பொழிவு!


அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

கடந்த ஆண்டு 13.08.2011 அன்று அல் மனார் சென்டரில் அமீரக வரலாற்றில் முதன்முறையாக இஸ்லாமிய நிகழ்ச்சி ஒன்றுதமிழில் துபை அரசாங்க அனுமதியுடனும் ஆதரவுடனும் முஃப்தி உமர் ஷரீஃப் காஸிமி அவர்களின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றதை அனைவரும் அறிவீர்கள்.
 
.
தொடர்ந்து இஸ்லாமிய தமிழ் அமர்வுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த 2வது சந்தர்ப்பத்தில், வரும் வெள்ளிக்கிழமை 10.02.2012  மாலை சரியாக 5 மணியளவில் அல் மனார் சென்டரில் தாயகத்திலிருந்து வருகை தந்துள்ள சகோதரர் கோவை அய்யூப்அவர்கள் கலந்து கொண்டு இஸ்லாம் - அன்றும் இன்றும் என்ற தலைப்பின் கீழ் கருத்தாழமிக்க, இம்மை மறுமைக்கு பயனுள்ளதோர் சிறப்புரையாற்றவுள்ளார்கள்.
 
அனைவரும் கலந்து பயனடைய அன்போடு அழைக்கின்றோம்.
 
குறிப்பு : பெண்களுக்கு தனியிட வசதியும். வாகன வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
 
முன்பதிவுக்கு மற்றும் மேலதிக விபரங்களுக்கு......
04-2981931, 055-2177618.
 
-அதிரை அமீன்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக