AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

ஞாயிறு, 29 ஜனவரி, 2012

மனிதனின் ஞாபக சக்தியும்!! அதன் எண்ணற்ற சிறப்பு அம்சங்களும்


மனிதனுக்கு உள்ள சிறப்பம்சங்களில் ஒன்று, அவனது நீளமான, ஆழமான ஞாபகத் திறன்.
ஆனால் ஓர் உண்மை தெரியுமா?
மனித மூளையின் செல்களில் 96 சதவிகிதம், ஞாபக சக்தி தொடர்பான பணிகளில் ஈடுபடுவதில்லை. மனிதன் தனக்குள்ள மொத்த நினைவாற்றல் திறனில் 4 சதவிகிதத்தைத்தான் பயன்படுத்துகிறான். உலக மக்களில் ஒரு சதவிகிதத்தினரே தங்களின் ஞாபகசக்தியைத் திறமையுடன் பயன்படுத்துகின்றனர் என்று தெரியவந்திருக்கிறது.
அபார ஞாபகத்திறன் கொண்டவர்களும் உள்ளனர். அளப்பரிய உண்மைகளையும், எண்ணிக்கைகளையும் அவர்களால் நினைவில் வைத்திருக்க முடிகிறது.
அதேபோல, கால்குலேட்டர் போல விரைவாகக் கணக்குகளைச் செய்து முடிக்கும் நபர்களும் உள்ளனர். அத்தகையவர்கள் தங்களின் நினைவாற்றல் திறனில் ஏறக்குறைய 50- 60 சதவிகிதத்தையே பயன்படுத்துகின்றனர்.
புலன் அறிவு
பல்வேறு வழிகளில், பல்வேறு புலன்களின் மூலம் நாம் பலவற்றை அறிகிறோம். பார்வை, கேள்வி, சுவை, தொடுபுலன், செயல் ஆகிய பல உணர்வுகளின் மூலம் நமக்கு நினைவு பெறப்படுகிறது. பல்வேறு புலன்களின் மூலம் நமது நினைவுக்குப் பல்வேறு விஷயங்கள் கொண்டு வரப்படுகின்றன.
சாதாரணமாக, ஒன்றுக்கு மேற்பட்ட புலன்களின் மூலமாகவே நினைவு ஏற்படுகிறது. பெருமளவுச் செய்திகள் பார்வையின் மூலமாகவே பெறப்படுகின்றன.
இதைச் சரிவரப் பயன்படுத்த வேண்டும். எனினும், பிற புலன்களையும் நன்கு தூண்டிவிடுவது அவசியமாகும். பல்வேறு புலன்களின் மூலம் பெறப்படும் விவரங்களைத்தான் மனிதனால் நன்கு நினைவு வைத்துக்கொள்ள முடிகிறது. ஒரு முக்கியமான வாசகத்தைப் படித்துப் புரிந்துகொண்ட பின், அதை உரக்க மீண்டும் சொல்வது பயனளிக்கும். அதன்மூலம் கேள்விப் புலனும், செயல் பதிவும் நன்கு வலுப்பெறும்.
பிம்ப நினைவு
கிடைத்த விவரங்களை நினைவில் கொண்டிருப்பதை `பிம்ப நினைவு’ என்று கூறலாம். அந்த விவரங்கள் அனைத்தையும் பகுத்து ஆராய்ந்து, பழையவற்றுக்கும், புதியவற்றுக்கும் தொடர்புகளை நிறுவுவது `தர்க்க நினைவு’ ஆகும்.
அதனால்தான் நாம் சரிவர அறிந்திராதவற்றை விட, நன்கு அறிந்துள்ளவற்றை நினைவில் வைத்திருப்பது எளிதாக உள்ளது. பொருள் புரியும் வார்த்தைகளை நினைவில் கொள்வது, பொருளற்ற சொற்குவியலை நினைவில் வைத்திருப்பதை விட எளிதல்லவா?
உணர்ச்சி நினைவுகள்
உணர்ச்சி நினைவும் மக்களுக்கு உண்டு. அறிவு அல்லது தர்க்க நினைவைக் காட்டிலும் உணர்ச்சி நினைவு வலுவானது. அதனால்தான் சுவையான புத்தகங்களை வாசிப்பது, திரைப்படங்களையும், நாடகங் களையும் காண்பது போன்றவை நம் நினைவை விட்டு அகலாதிருக்கின்றன.
ஆகவே நாம் கற்றுக்கொள்ள வேண்டியவற்றில் சில சுவையான அம்சங்களைக் கண்டுபிடித்தால் அவற்றை எளிதாகக் கற்றுக்கொள்ள முடியும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக