AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

வியாழன், 19 ஜனவரி, 2012

சீனாவை போன்ற நாடல்ல இந்தியா : உயர் நீதிமன்றத்தில் கூகுள் இந்தியா நிறுவனம் தெரிவிப்பு


இணையத்தளங்களை முழுமையாக முடக்குவதற்கு இந்தியாவொன்றும் சீனாவல்ல.
இந்த ஜனநாயக நாட்டில், கருத்து சுதந்திரம் இருக்கிறது என டெல்லி உயர் நீதிமன்றத்திடம் கூகுள் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. சர்ச்சைக்குரிய வகையில் ஆட்சேப மற்றும் மத நிந்தனை கருத்துக்கள் பரப்படுவதாக கூகுள் உட்பட 21 இணையத்தளங்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதன் வழக்கு விசாரணையின் போது கூகுள் இந்தியா நிறுவனம் இவ்வாறு தெரிவித்தது. சர்ச்சைக்குரிய கருத்துக்கள் என்ற போதும், கருத்து சுதந்திரம் இங்கு இருக்கிறது. இணையத்தளங்களை முழுமையாக முடக்குவதற்கு இதுவொன்றும் சீனா அல்ல என அவர்கள் தெரிவித்தனர். 
எனினும் கூகுள் உட்பட குற்றம் சுமத்தப்பட்டுள்ள குறித்த இணையத்தளங்கள் சர்ச்சைக்குரிய சொற்களை தமது இந்தியாவுக்கான இணையப்பக்கங்களிலிருந்து நீக்காவிடின், அவற்றை தடை செய்ய நேரிடும் என நீதிபதி எச்சரித்தார்.
இவ் வழக்கு விசாரணைகள் முடிவுற்ற பின்னர் கூகள் இந்தியா தரப்பு வழக்கறிஞர் காவுல் அளித்த பேட்டியில், இணைய உலகம் இப்போது பில்லியன் கணக்கான பயனாளர்களை கொண்டிருக்கிறது. இவற்றில் தனியார், அரசதுறை நிறுவனங்களும் அடங்கும்.
உதாரணத்திற்கு வேர்ஜின் (virgin) எனும் சொல்லை கூகுளில் தேடினால் 82.30 கோடி தரவுகளை 0.33 செக்கனில் காட்டுகிறது. இது சர்ச்சைக்குரியது என இச்சொல்லை தடை செய்ய வேண்டும் என யோசனை தெரிவிக்கப்பட்டால், Virgin Airlines பற்றி அல்லது, Virgin areas பற்றியோ தெரியாமலே போய்விடும் என்றார்.
மேலும் கூகுள் இந்தியா என்பது இணையத் தளங்களை உருவாக்கும் தளமோ அல்ல. அமெரிக்க கூகுள் நிறுவனத்தின் இந்திய பிரிவு. அது சட்டபூர்வமாக செயல்பட கூடியது. எனவே கூகுள் இந்தியாவுக்கு எதிராக குற்ற நடவடிக்கை எடுக்க முடியாது என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக