AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

வெள்ளி, 20 ஜனவரி, 2012

இனி ஹஜ் விண்ணப்பத்துடன் பாஸ்போர்ட் ஒரிஜினல் வேண்டாம்


புதுடெல்லி:புனித ஹஜ்ஜிற்கான விண்ணப்பத்துடன் ஒரிஜினல் பாஸ்போர்ட்டை சமர்ப்பிக்கும் நிபந்தனையை தளர்த்த சேர்மன் முஹ்ஸினா கித்வாய் தலைமையில் விஞ்ஞான் பவனில் நடந்த ஹஜ் கமிட்டி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இனி ஹஜ்ஜிற்கு விண்ணப்பிக்கும் வேளையில் பாஸ்போர்ட்டின் நகலை மட்டும் இணைத்தால் போதுமானது. பின்னர் ஹஜ்ஜிற்கு செல்ல தேர்வு செய்யப்பட்ட பிறகு ஒரிஜினலை
சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாண்டு இந்திய ஹஜ் கமிட்டி வழியாக ஹஜ் பயணம் செல்ல விண்ணப்பிக்க கடைசி தினம் ஏப்ரல் 15 ஆம் தேதி ஆகும். விண்ணப்பிக்கு அனைத்து நபர்களின் ஒரிஜினல் பாஸ்போர்ட்டுகளை பெற்றுவிட்டு பின்னர் தேர்ந்தெடுக்காத நபர்களின் பாஸ்போர்ட்டுகளை திரும்ப அளிக்கும் வழக்கம் இதுவரை நடைமுறையில் இருந்தது. இது விண்ணப்பதாரருக்கு சிரமத்தை ஏற்படுத்துவதாக புகார் எழுந்தது.
ஹரம் ஷெரீஃபிற்கு அருகில் தங்குவதற்கு வசதி கிடைக்கும் ‘க்ரீன் கேட்டகரி’ யின் தூரம் 1500 மீட்டர் ஆக உயர்த்தவும் தீர்மானிக்கப்பட்டது.
1200-2000 மீட்டர் தூரம் கொண்ட ‘வைட் கேட்டகரி’ முற்றிலும் நீக்கப்பட்டது. ஹரமில் இருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள அஸீஸியாவில் தங்குமிட வசதிகளில் மாற்றமில்லை.’க்ரீன்கேட்டகரியின்’ கட்டணம் 4000 ஆயிரம் ரியாலில் இருந்து 4500 ரியாலாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஹஜ் கிரியைகளில் ஒன்றான ஆடுகளை பலி கொடுக்க(குர்பான்)  இஸ்லாமிக் டெவலப்மெண்ட் வங்கி வழியாக செய்ய விருப்பமுள்ளவர்கள் அதற்கும் விண்ணப்பிக்கலாம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக