AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

ஞாயிறு, 4 டிசம்பர், 2011

பாதுகாப்பு கெடுபிடி அதிகரிப்பு ரயில் ஏற சீக்கிரம் போங்கள்

சென்னை, : பாபர் மசூதி இடிப்பு தினமான டிச.6ம் தேதியை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள ரயில்நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன.சென்னை சென்ட்ரல், எழும்பூர், காட்பாடி, சேலம், கோவை, திருச்சி, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட முக்கிய ரயில்நிலையங்கள், ரயில்பாதைகள், பெரிய, சிறிய பாலங்கள், ரயில்வே அலுவலகங்கள், பணிமனைகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்பு படையினர் மட்டுமின்றி 3 பட்டலியன் தமிழ்நாடு சிறப்பு காவல் படை, உள்ளூர் போலீ சாரும் ரயில்நிலையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ரயில்வே பாதுகாப்பு படையின் வெடிகுண்டு அகற்றும் படையினர், மோப்ப நாய் படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.சென்னை சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட முக்கிய ரயில்நிலையங்களில்4ம் தேதி முதல் 6ம் தேதி வரை பார்சல்கள் அனுப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.  

ரயில்களில் ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.சென்னை வரும், புறப்படும் ரயில்கள் வெடிகுண்டு அகற்றும்படையினர் தொடர்ந்து சோ தனை செய்கின்றனர். ரயில்நிலையங்களில் தீவிர சோதனைக்கு பிறகே பயணிகள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். பயணிகள் கொண்டு வரும் உடமைகளும் சோதனை செய்யப்படுகின்றன.சென்னை சென்ட்ரலில் நேற்று சென்ட்ரல் காவல் கோட்ட  துணைக் கண்காணிப்பாளர் பொன்.ராமு, இன்ஸ்பெக்டர்கள் சேகர்,  நீதிமோகன், ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ் பெக்டர் திருச்செல்வம், அழகர்சாமி ஆகியோர் பாதுகாபபு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர். இதேபோல் எழும்பூர் காவல்கோட்ட துணை கண்காணிப்பாளர் தில்லைநடராஜன், இன்ஸ்பெக்டர் செந்தில்,  ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர்  ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணித்து வருகின்றனர். பாதுகாப்பு கெடுபிடிகள், சோதனைகள் காரணமாக பயணிகள் நீண்ட வரிசையில் நின்று ரயில்நிலையங்களின் உள்ளே செல்ல வேண்டி உள்ளது. எனவே தாமதத்தை தவிர்க்க பயணிகள் சீக்கிரமாக ரயில்நிலையம் செல்வது நல்லது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக