தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி)யால் நடத்தப்படும் தேர்வுகளுக்கான விடைப் பட்டியலை (Key answer)தேர்வு முடிந்தவுடன் விரைவில் வெளியிட வேண்டும் என மமக தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பின ருமான பேரா.எம்.ஹெச்.ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்தார்.
கடந்த 14.09.2011 அன்று தமிழக சட்டப்பேரவையில் ஆற்றிய உரையில் " Tamil nadu public service commission" நடத்தக்கூடிய தேர்வுகளைப் பற்றியும் ஒரு கருத்தை இங்கே தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தமிழ்நாடு தேர்வாணையத்தினுடைய தேர்வுகள் எழுதக்கூடிய மாணவர்களுக்கு ஒரு transparent ஆக ஒரு வெளிப்படையாக நாம் என்ன தேர்வு எழுதினோமோ அதற்கேற்ற மாதிரியான மதிப்பெண்களை பெற்றிருக்கின்றோம், அதன் காரணமாக நாம் வெற்றிபெற்றிருக்கின்றோம் அல்லது வாய்ப்பை நாம் இழந்திருக்கின்றோம் என்பதில் அவர்களுடைய மனசும் திருப்தி அடையக்கூடிய அளவிற்கு இருக்க வேண்டும். அதற்காக வேண்டி நான் இரண்டு ஆலோசனைகளை முன்வைக்க விரும்புகிறேன் முதலாவதாக அந்தத் தேர்வினுடைய விடைகளை தேர்வு முடிந்த பிறகு, அந்தந்த கேள்விகளுக்கான விடைப்பட்டியலை தேர்வாணையம் வெளியிட வேண்டும். தேர்வு முடிந்த பிறகு வெளியிடும்போது அந்த மாணவர்கள் நாம் சரியாக எழுதினோமா அல்லது தவறாக எழுதினோமா என்பதை அறிவதற்கான வாய்ப்பு இருக்கிறது" என்று கூறியிருந்தார்.
இந்த கோரிக்கையின் அடிப்படையில் Tamil nadu public service commission கடந்த 25.09.2011 அன்று நடைப்பெற்ற labour Officer மற்றும் 16.10.2011 அன்று நடைப்பெற்ற General Foreman/Technical Assistant in the Tamil Nadu Motor Vehicles Maintenance Sub. Service தேர்வுகளுக்கான Tentative Answer வெளியிடப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக