AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

வியாழன், 17 நவம்பர், 2011

ஓட்டுபோட்ட மக்களுக்கு வேட்டு : பால் மற்றும் பேருந்து கட்டணங்கள் அதிரடி உயர்வு !

சென்னை : தமிழ்நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கி கொண்டிருப்பதாகவும் குறிப்பாக போக்குவரத்து துறையும், மின்சார துறையும் நஷ்டத்தில் இயங்குவதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார். மின்துறையில் 40659 கோடி கடன் தொகையும் போக்குவரத்து துறையில் 6150 கோடியும் கடன் 
தொகையும் நிலுவையில் உள்ளதாகவும் இதே நிலை தொடர்ந்தால் போக்குவரத்து கழங்கள் திவாலாகிவிடும் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் பேருந்து 
கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. 

பேருந்து கட்டண உயர்வு :

சென்னை மாநகர பேருந்துகளில் பயணக் கட்டணம் கிலோமீட்டருக்கு 28 பைசாவிலிருந்து 42 பைசாவாகவும், மாநகர சொகுசு பேருந்துகளில் 38 பைசாவிலிருந்து 
60 பைசாவாக உயர்ந்துள்ளது. 

அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகளில் 52 பைசாவிலிருந்து 70 பைசாவாகவும் உயர்ந்துள்ளது. 

சென்னை மாநகரை தவிர பிற நகரங்களில் அதிகபட்ச பேருந்து கட்டணம் ரூ 7 லிருந்து ரூ.12 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

சென்னை மாநகர பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.2 லிருந்து ரூ.3 ஆக உயருகிறது. 

சென்னையில் அதிகபட்ச பேருந்து கட்டணம் ரூ 12 லிருந்து ரூ. 14 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

பால் விலை உயர்வு : 

பேருந்து கட்டண உயர்வை அடுத்து பால் கொள்முதல் விலைகளை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. 

இதன் படி ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6.25 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது இனி ஒரு லிட்டர் ஆவின் பால் ரூ.24 க்கு விற்க்கப்படும். இது 
அட்டைதாரர்களுக்கும் பொருந்தும். 

பசும்பால் கொள்முதல் விலை ரூ.18 லிருந்து ரூ.20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

எருமை பால் கொள்முதல் விலை ரூ.26 லிருந்து ரூ.28 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

தமிழக முதல்வராக பதியேற்றயுடன் டெல்லி சென்று தமிழக வளர்ச்சிக்காக கணிசமான நிதி பெற்று வந்த ஜெயலலிதா தற்போது மக்களின் அதியாவசியமன 
பால் மற்றும் பேருந்து கட்டணங்களை உயர்தியுள்ளது சாமானிய மக்களுக்கு அதிர்ச்சி தரும் விதத்தில் அமைந்துள்ளது. மேலும் மின்சார கட்டணங்களை 
உயர்த்த, தமிழ்நாடு மின்சாரம் வாரியம் கோரிக்கை தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இதன்படி விரைவில் மின்சார கட்டணத்தையும் உயர்த்த தமிழக 
அரசு முடிவெடுக்கும் என் அஞ்சப்படுகிறது.

கட்டண உயர்வுக்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு !

சென்னை : தமிழக அரசு வெளியிட்டுள்ள கட்டண உயர்வுகளை அரசியல் கட்சிகள் பல்வேறு கோணத்தில் விமர்சனம் செய்துள்ளன. அதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஜயதரணி மத்திய அரசு தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளது ஆனாலும் தமிழக அரசு இவ்வாறு விலையேற்றம் செய்வது கண்டிக்கத்தக்கது என்று கருத்து தெரிவித்துள்ளார். தி.மு.க வை சேர்ந்த திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திமுக அரசை குறை கூறுவதிலேயே குறியாக உள்ளார் என்றும் தமிழக அரசின் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று சிபிஎம் கருத்து தெரிவித்துள்ளது. மேலும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த தமிழிசை மக்கள் மீது அதிக பாரத்தை சுமத்த கூடாது என்று தெரிவித்துள்ளார். ஆனால் அதிமுகவை சேர்ந்த மலைச்சாமி வேறு வழியில்லாமல் பேருந்து கட்டணம், பால் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக