AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

சனி, 26 நவம்பர், 2011

கடலூர் மாவட்டத்தில் கனமழை தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை யால் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.  கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகள், வாய்க்கால்களில் அளவுக்கு அதிகமாக மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பிரதான ஏரிகளான வீராணம், பெருமாள் ஏரி, வாலாஜா ஏரி, கொண்டகி ஏரி, வெலிங்டன் நீர்தேக்கம் ஆகியவை நிரம்ப தொடங்கியுள்ளன. 50க்கும் மேற் பட்ட குளம், குட்டைகள் நிரம்பி வழிகின்றன. கெடிலம், வெள்ளாறு, மணிமுத்தாறு, உப்பனாறுகள் மற்றும் பாசிமுத்தான்ஓடை, கான்சாகிப் வாய்க்கால், வடவாறு, பிச்சாவரம் உப்ப னாறு, பரவனாறு, கடலூர் துறைமுக ஆறு ஆகியவற்றில் முழு கொள்ளளவில் தண்ணீர் செல்கிறது. கன மழை காரணமாக தாழ்வான பகுதிகள் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. 100க்கும் மேற்பட்ட குடிசைகளில் மழைநீர் புகுந்துள்ளது. பல இடங்களில் குடிசைகளின் சுவர் இடிந்து விழுந்தன. கடலூர் அருகே எஸ். புதூர் கிராமத்தில் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் விவசாய தொழிலாளி காசிநாதன் (40), அவரது மனைவி மங்கையர்கரசி (35) ஆகியோரும், அன்னவல்லி கிராமத்தில் சுவர் இடிந்து விழுந்து கூலி தொழிலாளி சிவலிங்கம் (31) என்பவரும் படுகாயம் அடைந்தனர்.
 கடந்த ஒரு வாரமாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடலில் ராட்சத அலைகள் எழும்பி அச்சுறுத்தி வருகின்றன. கடலூர் துறைமுகத்திலும், மீனவர் கிராமங்களிலும் விசைப்
படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் மீன்பிடி தொழில் முடங்கி, மீன் விற் பனை, ஏற்றுமதி வணிகமும் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் ரூ. 10 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. 

கீரிப்பேட்டை, பிஎஸ் பேட்டை, கவரப்பட்டு, பிச்சாவரம் உள்ளிட்ட கிராமங்களில் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. இதேபோல் புறவழிச்சாலை யில் வடிகால் வாய்க்கால் அமைக்காததால் கண்ணங்குடி, கீரநத்தம், ஆடூர், பூந்தோட்டம் ஆகிய கிராமங்களிலும் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. கடலூர்-சிதம்பரம் சாலை, சிதம்பரம்-வீராணம் ஏரிக்கு செல்லும் கண்ணங்குடிசாலை, குள்ளஞ்சாவடி- சத்திரம் சாலை உள்ளிட்ட இடங்களிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. உழவர்சந்தைக்கு வரும் விவசாயிகள், அரசு ஊழியர்கள், அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் என அனைத்து தரப்பினரும் கடும் பாதிப்புக்கு ஆளானார்கள். 

கடலூர் அண்ணா விளை யாட்டு அரங்கம், எஸ்பி அலுவலகம், நீதிபதிகள் குடியிருப்பு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உள்ளிட்ட அரசு அலுவலக வளாகங்களை மழைநீர் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் கடற்கரைசாலை, குண்டுஉப்பலவாடி சாலை, முதுநகர் சாலை, சிப்காப் சாலை உள்ளிட்ட பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. புருசோத்தமன்நகர், பீமாராவ் நகர், வன்னியர்பாளையம், புதுத்தெரு உள்ளிட்ட பல குடிசைப் பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

நெய்வேலி: நெய்வேலி அடுத்த மந்தாரக்குப்பம் பகுதியில் 2வது சுரங்கம் உள்ளது. இந்த சுரங்க பகுதிகளில் மேல்பாப்பனப்பட்டு, மேல்பாதி, கீழக்குறிச்சி, பெரியாக்குறிச்சி உள்ளிட்ட கிராமங்கள் உள் ளன. தொடர் மழையால் இந்த பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதில் பள்ளமான பகுதிகளில் அமைந்திருந்த வீடு களை மழைநீர் சூழ்ந்தது. இதனால் அங்கு வசித்த மக்கள் அருகில் உள்ள பள்ளிகளில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். இவர்களுக்கு என்எல்சி நிர்வாகம் சார்பில் உணவு பொட்டலங்களும் வழங்கப்பட்டன. இதனால் அப்பகுதி மக்களும் பள்ளிகளில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். 

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் தொடர்ந்து பெய்யும் மழையால் ஏரி, குளங்கள் நிரம்பின. ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வயல்களிலும் தண்ணீர் தேங்கியதால் நெற்பயிர்கள் மூழ்கி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடைவீதியில் மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து ஓடியதால் துர்நாற்றம் வீசியது. 
வேப்பூர்: வேப்பூர் பகுதி யில் நல்லூர், மங்களூர், அடரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது. இதனால் விவசாய பணி பாதிக்கப்பட்டுள்ளது.நல்லூர் மணிமுக்தாற்றில் அதிகளவு தண்ணீர் ஓடுகிறது.

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் நேற்று முன் தினம் இரவு விடிய, விடிய பலத்த மழை, பேருந்து நிலையத்தில் வெள்ள நீர் சூழ்ந் தது. நகரில் கடை வீதி, பெண்ணாடம் ரோடு, கட லூர் ரோடு ஆகிய இடங்களில் சாலை மேல் அதி களவு தண்ணீர் சென்ற தால் வாகனங்கள் நீந்தி செல்ல வேண்டிய நிலை இருந்தது. விருத்தாசலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு பெய்த கன மழையில் பேருந்து நிலையத்தில் வெள்ள நீர் சூழ்ந்தது. இத னால் பேருந்துகள் வெள்ள நீரில் நீந்தி செல்ல வேண்டிய நிலை இருந்தது. 

மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து வந்ததால் பேருந்து நிலையம் முழுவதும் துர்நாற்றம் வீசியது. பயணிகள் பேருந்து ஏறவும், இறங்கவும் மிகவும் சிரமப்பட்டனர். நகரில் கடை வீதி, பெண் ணாடம் ரோடு, கடலூர் ரோடு ஆகிய பகுதிகளில் சாலை மேல் அதிகளவு வெள்ளநீர் சென்றதால் நேற்று காலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நகரின் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

கண்டியாங்குப்பம் கிராமத்தில் கிழக்கு தெருவில் வடிகால் வசதி இல்லாததால் தெரு முழுவதும் வெள்ளநீர் சூழ்ந்து பலரது வீடுகளிலும் சூழ்ந்தது. வார்டு தேமுதிக கவுன்சிலர் ராஜ்குமார் அவரது சொந்த செலவில் பொக்லைன் இயந்திரம் மூலம் வடிகால் களை தூர்வாறினார். தகவலறிந்த தொகுதி எம்எல்ஏ முத்துக்குமார், நகர் மன்ற உறுப்பினர் அரங்கநாதன் ஆகியோர் சென்று பார்வையிட்டனர். நகரில் வடிகால்கள் முற்றிலும் ஆக்கிரமிக்கப்பட்டதால் வெள்ள நீர் செல்ல வழியில்லாமல் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. மாத்தூர் கிராமத்திற்கு செல்லும் மூன்று தரைப்பாலத்திலும் மழை நீர் அதிக அளவில் சாலைக்கு மேலே சென்றதால் கிராமமே துண்டிக்கப்பட்டுள்ளது. கிராமத்தில் உள்ள நூற்றுக்கணக்கான நெற்பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

பண்ருட்டி: பண்ருட்டி பகுதியில் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடைவீதிகளில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி கிடக்கிறது. காய்கறி கடை களில் காய்கறிகள் விற்பனை ஆகாமல் தேங்கி கிடக்கின்றன. சாலையோர வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிதம்பரம்: சிதம்பரம் பகுதியில் கடந்த 2 நாட் களாக பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. சிவசக்திநகர், அரசு மருத்துவமனை, இந்திராநகர், ராஜாநகர், வண்டிகேட் பகுதி, அம்மாபேட்டை, பேருந்து நிலையம் உள் ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. சிதம்பரம் நகரை ஒட்டியுள்ள அனைத்து நகர்களிலும் தண்ணீர் தேங்கி நிற்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வீட்டுக்குள் முடங்கி கிடக் கும் நிலையில் உள்ளனர். கடவாச்சேரி, வல்லம்படுகை, இளநாங்கூர், மாரியப்பாநகர், அண்ணாமலை நகர் உள்ளிட்ட பகுதிகளில் சம்பா நடவுப்பயிர்களும் தண்ணீரில் மூழ்கி உள்ளது. 

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கரும்பு விவசாயிகளுக்கு இந்த தொடர்மழை மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. கத்தரிக்காய், வெண்டைக்காய் போன்ற பயிர்களும் மழைநீரில் மூழ்கியுள்ளதால் அவற்றை சாகுபடி செய்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.  

புவனகிரி, பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம், சேத்தியாத்தோப்பு, கிள்ளை, மருதூர் உள்ளிட்ட பகுதிகளில்  பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பரங்கிப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் நகர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. 

திட்டக்குடி:
திட்டக்குடி பகுதியில் நேற்று காலை நிலவரப்படி லக்கூரில் 60 மிமீ, ராமநத்தத்தில் 60.2 மிமீ, கீழசெருவாயில் 70.5 மிமீ, கலாந்துறையில் 60 மிமீ மழை பதிவாகி உள்ளது. மழை காரணமாக வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணையில் 22.70 அடி தண்ணீர் உள்ளது. தொடர் மழையால் பெருக்கெடுத்து வந்த தண்ணீர் நிதிநத்தம் ஓடை பாலத்தின் ஒரு பகுதியை அரித்து சென்றது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. திட்டக்குடி முருகன்குடி வெள்ளாற்றில் கட்டப்பட்டு வரும் மேம்பால கட்டுமான பணி மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக