AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

சனி, 26 நவம்பர், 2011

அந்நிய நேரடி முதலீட்டிற்கான உச்சவரம்பு நீக்கம் மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ. வெளியிடும் பத்திரிகை அறிக்கை:

சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு இதுவரை இருந்துவந்த உச்சவரம்பை மத்திய அரசு ஏதேச்சதிகாரமாக நீக்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இது இந்திய நாட்டின் சில்லரை வியாபாரிகள் நான்கரை கோடி பேரை சீரழிக்கும் நடவடிக்கையாகும்.
ஆன்லைன் டிரேட் எனப்படும் யூகபேர வணிகத்தால் விலைவாசி கட்டுப்பாடில்லாமல் உயர்ந்துவரும் சூழ-ல் அதைத் தடுப்பதற்கும் யூகபேர வணிகத்தை தடை செய்வதற்கும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத மத்திய அரசு, பன்னாட்டு நிறுவனங்களின் பகல் கொள்ளைக்கு துணைபோகும் வகையில் சில்லரை வணிகத்தில் உச்சவரம்பை நீக்கியிருப்பது மக்கள் விரோத நடவடிக்கையாகும்.

உடனடியாக மத்திய அரசு தனது அறிக்கையை திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும், அத்தியாவசியப் பொருட்களான புளி, மிளகாய், மிளகு உள்ளிட்ட மளிகைப் பொருட்களை உள்நாட்டு பெருநிறுவனங்களும், வால்மார்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்களும் கொள்முதல் செய்வதற்கு தடைவிதிக்க வேண்டும் எனவும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்துகிறது.

அன்புடன்
(எம்.ஹெச். ஜவாஹிருல்லா)

0 கருத்துகள்:

கருத்துரையிடுக