AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

ஞாயிறு, 20 நவம்பர், 2011

பால் விலை, பஸ் கட்டணம் குறைக்கக் கோரி தமிழகம் முழுவதும் போராட்டம்

சென்னை : பால் விலை, பஸ் கட்டண உயர்வை குறைக்கக் கோரி தமிழகம் முழுவதும் நேற்றும் 2வது நாளாக பல இடங்களில் போராட்டம் நடைபெற்றது. பஸ்களில் கண்டக்டருடன் பயணிகள் தகராறில் ஈடுபட்டனர். கோவையில் பாரதிய ஜனதா கட்சியினர் பிச்சை எடுக்கும் நூதன போராட்டத்தை நடத்தினர். விருதுநகரில் மார்க்சிஸ்ட் தொண்டர்கள் பஸ்சை சிறைபிடித்தனர். இதனால் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் சாதாரண பஸ் கட்டணம், டீலக்ஸ் பஸ்கள், விரைவு பஸ்கள், ஏசி பஸ்களின் கட்டணங்கள் கடுமையாக உயர்த்தப்பட்டன. முன் அறிவிப்பு இல்லாமல் நள்ளிரவில் திடீரென்று பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். நேற்றுமுன்தினம் பல இடங்களில் கட்டண உயர்வை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தினர். மக்கள் கோபம் தணியாத நிலையில் 2&வது நாளாக நேற்றும் போராட்டம் தொடர்ந்தது.

சென்னை தாம்பரத்தில் ஏற்கனவே எடுக்கப்பட்ட பஸ் பாஸ் செல்லாது என்று கூறியதால் நூற்றுக்கும் மேற்பட்ட கூலி தொழிலாளர்கள், டெப்போ முன்பு கூடி ஆர்பாட்டம் செய்தனர். அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் வந்து பொதுமக்களை சமாதானப்படுத்தினர்.

புதுக்கோட்டை அருகே தஞ்சை& புதுகை& பட்டுக்கோட்டை மெயின் ரோட்டில் இச்சடி முக்கத்தில் இச்சடி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் நேற்று காலை 8 மணியளவில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 200 பெண்கள் உள்பட 600 பேர் கலந்துகொண்டனர். Ôமிக், கிரைண்டர், மின்விசிறி வேண்டாம். பஸ் கட்டணம், பால் விலை உயர்வை குறைக்க வேண்டும்Õ என மறியலில் ஈடுபட்டோர் கோஷம் எழுப்பினர்.

கோவை மாநகர பா.ஜ தலைவர் நந்தகுமார் தலைமையில் பீளமேடு பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நேற்று காலை அக்கட்சியினர் பயணிகளிடம் பிச்சையெடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலையில் செல்கிறவர்களிடமும், பஸ் பயணிகளிடமும் பிச்சை எடுத்தனர். இதனால், போராட்டத்தில் ஈடுபட்ட நந்தகுமார் உட்பட 13 பேரை பீளமேடு போலீசார் கைது செய்தனர். ÔÔபிச்சையெடுத்ததில் 21 வசூலானது. அதை நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள தமிழக அரசுக்கு அனுப்பி வைப்போம்ÕÕ என்று நந்தகுமார் கூறினார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இருந்து சென்னை செல்ல, அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களில் பழைய கட்டணம் 270ம், ஏசி பஸ்களில் 440ம் வசூலிக்கப்பட்டது. அரசு பஸ் கட்டண உயர்வை அறிவிப்பதற்கு முன், அருப்புக்கோட்டையில் இருந்து சென்னைக்கு செல்வோர், இந்த பஸ்களில் பழைய கட்டணத்தை செலுத்தி முன்பதிவு செய்திருந்தனர். நள்ளிரவில் பஸ் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டதால், அருப்புக்கோட்டையில் இருந்து சென்னை செல்லும் அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களுக்கு 375ம், ஏசி பஸ்களுக்கு 475ம் நிர்ணயிக்கப்பட்டன. பழைய கட்டணத்தில் முன்பதிவு செய்தவர்களிடம் புதிய கட்டணம் கேட்கப்பட்டது. இதனால், கண்டக்டருக்கும், பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

விருதுநகரில் அரசு டவுன் பஸ்களில் அரசு நிர்ணயித்ததை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் பஸ்களில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார், 25 பேர் விருதுநகரில் இருந்து சிவகாசி சென்ற அரசு டவுன் பஸ்சில் ஏறி கண்டக்டருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து அனைத்து பயணிகளும் பஸ்சில் இருந்து கீழே இறங்கிவிட்டனர். பஸ் நிறுத்தப்பட்டது. 

கோவையில் நேற்று 2வது நாளாக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். சென்னையில் மாணவர் அமைப்பு சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதற்கிடையில் தமிழகம் வரும் புதுவை பஸ்களிலும் கட்டணத்தை உயர்த்தி உள்ளனர்.
நேற்று காலை சென்னையிலிருந்து புதுவை வந்த பிஆர்டிசி பஸ்சில் டிக்கெட் விலை 55 லிருந்து 97 ஆக வசூலிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த பயணிகள் புதுவையை அடுத்த காலாப் பட்டு அருகே பஸ்சை சிறைபிடித்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக