AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

வெள்ளி, 4 நவம்பர், 2011

தமிழக அமைச்சரவையை மீண்டும் மாற்றியமைத்தார் முதல்வர்; 6 பேர் நீக்கம்; 6 பேர் புதிய அமைச்சர்களாக நியமனம்


சென்னை: தமிழக அமைச்சரவையை முதல்வர் ஜெயலலிதா மீண்டும மாற்றியமைத்துள்ளார். அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 6 பேர் விடுவிக்கப்பட்டு, 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். திருச்சி மேற்கு தொகுதியில் வெற்றி பெற்ற பரஞ்சோதி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்.
சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க., தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. பின்னர் சட்ட அமைச்சராக இருந்த இசக்கி சுப்பையாவை அமைச்சரவையிலிருந்து நீக்கினார். ஒரு சிலரின் இலாக்களை முதல்வர் மாற்றியமைக்கப்பட்டன. மேலும் தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த மரியம் பிச்சை சாலைவிபத்தில் பலியானார். கருப்பசாமி உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.
இந்நிலையில் தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் இருக்கும் என தகவல்கள் வெளியாகின. உள்ளாட்சி தேர்தலில் தோல்வி, கோஷ்டிபூசல் காரணமாக ஒரு சில அமைச்சர்களின் பதவி பறிபோகும் என கூறப்பட்டது.
இதனை தொடர்ந்து தமிழக அமைச்சரவையில் இன்று அதிரடி மாற்றம் செய்யப்பட்டது. அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 6 பேரை நீக்கவிட்டு 6 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அமைச்சர்களாக நீக்கப்பட்டவர்கள்: ஊரக தொழில்துறை அமைச்சர் சி.சண்முகவேலு, உணவுத்துறை அமைச்சர் புத்திசந்திரன், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்பி உதயகுமார், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் சிவபதி, அறநிலையத்துறை அமைச்சர் சண்முகநாதன், செய்தித்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் செந்தமிழன் ஆகியோர் அமைச்சர் பதவியை இழந்துள்ளனர்
அமைச்சர்களாக நியமிக்கப்பட்டவர்கள்: சமீபத்தில் நடந்த திருச்சி மேற்கு தொகுதி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற பரஞ்சோதி, கணத்துக்கடவு தொகுதி எம்.எல்.ஏ., எஸ்.தாமோதரன், மாதவரம் தொகுதி எம்.எல்.ஏ., வீ.மூர்த்தி, நன்னிலம் தொகுதி எம்.எல்.ஏ., ஆர் காமராஜ், சிவகாசி தொகுதி எம்.எல்.ஏ., ராஜேந்திர பாலாஜி மற்றும் பரமக்குடி எம்.எல்.ஏ., சுந்தர்ராஜ் ஆகியோர்அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக