கோவையில் 1997 நவம்பர்-டிசம்பரில் வரலாறு காணாத கலவரம் நடைபெற்றது. 19 முஸ்லிம்கள் சுட்டுக் கொல்லப்பட்டதுடன் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளும் சூறையாடப்பட்டன. மக்கள் இவ்வாறு பரிதவித்து நின்ற நிலையில் அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சைய்யது நிஸார் அஹ்மது, நல்லமுஹம்மது களஞ்சியம் மற்றும் தற்போது ததஜ அபிமானியாக இருக்கும் ஜி.எம். ஷேக் ஆகிய மூவரும் ஒன்று சேர்ந்து கோயம்புத்தூர் நிவாரண நிதியைத் தொடங்கினார்கள்.
இந்த நிவாரண நிதிக்கு தமிழகத்தில் உள்ள பொது மக்களிடமிருந்தும் வெளி நாட்டில் பணியாற்றும் இந்தியர்களிடமிருந்தும் மட்டுமே நிதிப் பெறப்பட்டது. இந்த நிதிகள் அனைத்தும் சென்னையில் உள்ள வங்கி ஒன்றில் கோயம்புத்தூர் நிவாரண நிதி என்ற வங்கிக் கணக்கில் போடப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு காசோலை யாக வழங்கப்பட்டது.
இந்த சூழலில் மத்தியில் வாஜ்பேயி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில் உள்நோக்கத்துடன் சி.பி.ஐ. மற்றும் வருமான வரித் துறை மூலமாக தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, பொதுச் செயலாளர் எஸ்.ஹைதர் அலி மற்றும் கோயம்புத்தூர் முஸ்லிம் நிவாரண நிதியின் நிர்வாகிகளான சைய்யது நிஸார் அஹ்மது, நல்லமுஹம்மது களஞ்சியம் மற்றும் ஜி.எம். ஷேக் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

முதலில் வருமான வரித் துறை மிக விரிவாக விசாரணைகளை மேற்கொண்டது. கோவையில் வருமான வரித்துறை அதிகாரிகள் பல நாட்கள் முகாமிட்டு நிவாரண நிதியைப் பெற்றுக் கொண்டவர்கள் அனைவரையும் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டார்கள். கோவை முஸ்லிம் நிவாரண நிதியிலிருந்து தொகையைப் பெற்றவர்கள் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதற்கான சான்றுகள் (எப்.ஐ.ஆர். புகைப்படங்கள் முதலியவை), கோகுலகிருஷ்ணன் ஆணையம் பரிந்துரையின் அடிப்படையில் அரசு நிவாரணம் அவர்களுக்கு கிடைத்ததா? கோவை முஸ்லிம் நிவாரண நிதி வழங்கிய காசோலை பாதிக்கப்பட்டவர்களின் வங்கியில் போடப்பட்டதற்கான அத்தாட்சி என்று விலாவாரியாக விசாரணை நடத்தினார்கள். இறுதியில் கோவை முஸ்லிம் நிவாரண நிதி மிக நேர்மையாகவும் நாணயமாகவும் இயங்கி உள்ளது என்றும், இதன் நிதி சரியான முறையில் வினியோகிக்கப்பட்டுள்ளது என்றும் வருமான வரித் துறை ஆணையாளர் தனது முடிவை அறிவித்தார்.
இதே நேரத்தில் வெளிநாட்டி லிருந்து எப்.சி.ஆர்.ஏ. என்னும் வெளிநாட்டு நன்கொடை ஒழுங்காற்றுச் சட்டத்தின் அடிப்படையில் மத்திய அரசின் முன் அனுமதி பெறாமல் வெளிநாட்டு நிதியைப் பெற்றோம் என்று சி.பி.ஐ. என்னும் மத்திய புலனாய்வுத் துறை, தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, பொதுச் செயலாளர் எஸ். ஹைதர் அலி, சைய்யது நிஸார் அஹ்மது, நல்லமுஹம்மது களஞ்சியம் மற்றும் ஜி.எம். ஷேக் ஆகியோர் மீது சென்னை எழும்பூர் கூடுதல் மெட்ரோபோலிடன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக் கப்பட்டது. இந்த வழக்கில் சிபிஐ குற்றப் பத்திரிகையில், பண மோசடி செய்ததாக எவ்விதக் குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் தான் சென்ற செப்டம்பர் 30 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கோவையில் 1997 நவம்பர் டிசம்பரில் நடைபெற்ற வரலாறு காணாத கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சைய்யது நிஸார் அஹ்மது, நல்ல முஹம்மது களஞ்சியம் மற்றும் ஜி.எம். ஷேக் ஆகியோர் கோவை முஸ்லிம் நிவாரண நிதி என்னும் அறக்கட்டளையைத் தொடங்கினார்கள். இந்த அறக்கட்டளை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமையகத்தின் மேற்பார்வை முகவரியில் இயங்கியது. இதனையே குற்றமாகக் கருதி பேராசிரியர்.எம்.ஹெச்.ஜவாஹிருல்லா அவர்களுக்கும், சகோதரர் ஹைதர் அலி அவர்களுக்கும் ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கோவை முஸ்லிம் நிதியை நடத்திய மூவரும் மத்திய அரசின் முன் அனுமதி பெறாமல் வெளிநாட்டு நிதியைப் பெற்றார்கள் என்ற ஒரே குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர்களுக்கு இரண்டாண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கோவை முஸ்லிம் நிவாரண நிதி திரட்டிய பணம் தனிப்பட்ட பெயரில் எந்தவொரு வங்கியிலும் முதலீடு செய்யப்படவில்லை. கோவை முஸ்லிம் நிவாரண நிதி சார்பாக திரட்டப்பட்ட தொகை அனைத்தும் அந்த நிதியின் பெயரிலேயே வங்கியில் போடப்பட்டு அதே வங்கியின் காசோலை மூலமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத வேறுபாடின்றி அனைவருக்கும் வினியோகிக்கப்பட்டது. வருமான வரி தீர்பாணையம் இது குறித்த தனது தீர்ப்பில் (In the Income-Tax Appellate Tribunal Bench B Chennai I.T.A. No.4(Mds) இந்த நிதி மிக சரியான முறையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வினி யோகிக்கப்பட்டுள்ளது என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. வசூலிக்கப்பட்ட மொத்த தொகையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையாக வினியோகிக்கப்பட்டது.
மிகப்பெரும் அளவில் கலவரத் தால் பாதிக்கப்பட்டு மக்கள் பரிதவித்து நின்ற நிலையில் சைய்யது நிஸார் அஹ்மது, நல்ல முஹம்மது களஞ்சியம் மற்றும் ஜி.எம். ஷேக் ஆகியோர் கோவை முஸ்லிம் நிவாரண நிதி என்னும் அறக்கட்டளையைத் தொடங்கினார்கள். பரிதவித்து நிற்கும் மக்களுக்கு உதவி செய்வதில் முழு அக்கறை செலுத்தியதால் கவனக்குறைவாக மத்திய அரசின் முன்அனுமதியை அவர்கள் பெறவில்லை. எந்தவொரு வெளிநாட்டு அரசிடமிருந்தோ நபர்களிடமிருந்தோ நேரடியாக எந்தவொரு வெளிநாட்டு நிதியும் கோயம்புத்தூர் முஸ்லிம் நிதி பெறவில்லை என்றும் வெளிநாட்டில் பணியாற்றும் தமிழ்நாட்டவர் மட்டுமே நிதிகளை அனுப்பினார்கள் என்றும் இதனை வெளிநாட்டு நிதி என்று சொல்வது தவறு என்றும் இவ்வழக்கில் அவர்கள் தரப்பு வழக்குறைஞர் தெளிவாக வாதாடினார் என்பது கவனிக்கத்தக்கது.
எழும்பூர் கூடுதல் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை நீதிபதி, மேல்முறையீடு செய்வதற்காக நிறுத்தி வைத்தார். அடுத்து செசன்ஸ் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும். மக்களுக்கு நன்மை செய்ததைத் தவிர வேறு எதுவும் இதில் இல்லை. விரைவில் அனைவரும் வெற்றி பெற இறைவனை பிரார்த்திப்போம்.
இந்த உண்மைகளுக்கு மாறாக யாராவது அவதூறு பரப்பினால், மறுமையில் வல்ல ரஹ்மானின் முன்பு வழக்கு தொடுப்போம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமுமுக தலைவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை குறித்து அக்டோபர் 1 அன்று தவறான செய்தியை பிரசுரித்த தினமணி நாளிதழ் தவறை திருத்தி அக்டோபர் 4 அன்று வெளியிட்ட செய்தி
மோசடி வழக்கு இல்லை: ஜவாஹிருல்லாஹ் விளக்கம்
First Published : 04 Oct 2011 03:05:06 AM IST
சென்னை, அக். 3: தன் மீது மோசடி வழக்கு எதுவும் இல்லை என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தெரிவித்துள்ளார். இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: எழும்பூரில் உள்ள சென்னை பெருநகர நீதிமன்றத்தில் என் மீதும், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் (த.மு.மு.க.) பொதுச் செயலாளர் எஸ். ஹைதர் அலி உள்ளிட்டோர் மீதும் எவ்வித பொருளாதார மோசடி வழக்கையும் சி.பி.ஐ. பதிவு செய்யவில்லை. மத்திய அரசின் முன் அனுமதியைப் பெறாமல் வெளிநாடுகளிலிருந்து நன்கொடை பெற்றது தொடர்பாக மட்டுமே வழக்கு தொடுக்கப்பட்டது. கோவையில் 1997-ல் நடைபெற்ற கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக கோவை முஸ்லிம் நிவாரண நிதி என்ற அறக்கட்டளை தொடங்கப்பட்டது. இந்த அறக்கட்டளை த.மு.மு.க. தலைமை அலுவலக முகவரியில் இயங்கியது. இதனையே குற்றமாக கருதி எனக்கும், ஹைதர் அலிக்கும் ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வசூலிக்கப்பட்ட மொத்த தொகையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு விநியோகிக்கப்பட்டது. இதில் எவ்வித மோசடியும் நடைபெறவில்லை திரட்டப்பட்ட நிதியில் மோசடி செய்தோம் என்று சி.பி.ஐ. எங்கள் மீது எவ்வித குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யவில்லை. இந்த அறக்கட்டளையைத் தொடங்கியவர்கள் கவனக்குறைவாக மத்திய அரசின் முன்அனுமதியை அவர்கள் பெறவில்லை. எந்தவொரு வெளிநாட்டு நிறுவனத்திடமோ, நபரிடமிருந்தோ எவ்வித நிதியும் பெறப்படவில்லை. வெளிநாட்டில் பணியாற்றும் இந்தியர்களிடமிருந்து மட்டுமே நிதி பெறப்பட்டது. வாஜ்பாய் அரசு அரசியல் உள்நோக்கத்துடன் எங்கள் மீது தொடர்ந்த வழக்கு இது என்று ஜவாஹிருல்லாஹ் கூறியுள்ளார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக