AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

புதன், 5 அக்டோபர், 2011

உள்ளாட்சி தேர்தலில் பத்தாயிரம் வேட்புமனு தள்ளுபடி 20,000 பேர் போட்டியின்றி தேர்வு

சென்னை : தமிழக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்களின் இறுதி பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி 1 லட்சத்து 12,698 பதவிகளுக்கு 4 லட்சத்து 11,177 பேர் போட்டியிடுகிறார்கள். தமிழகம் முழுவதும் 19,646 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 57 உள்ளாட்சி பதவிகளுக்கு போட்டியிட யாரும் முன்வரவில்லை.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் திருச்சி மாநகராட்சி தவிர 1 லட்சத்து 32,401 உள்ளாட்சி பதவிக்கான தேர்தல் நடத்தப்பட உள்ளதாக கடந்த 21ம் தேதி இரவு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. வேட்புமனு தாக்கல் கடந்த 22ம் தேதி தொடங்கி 29ம் தேதி முடிவடைந்தது.

வேட்புமனு பரிசீலனை மற்றும் மனு வாபஸ் ஆகியவை நேற்று முன்தினம் 3 மணிக்கு முடிந்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் போட்டியிடுபவர்களின் இறுதி பட்டியல் வெளியிடுவது குறித்த பணியில் மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஈடுபட்டனர். அதன்படி நேற்று பிற்பகல் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்களின் இறுதி பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. அது வருமாறு:

சென்னை உள்ளிட்ட 9 மாநகராட்சி மேயர் வேட்பாளர் பதவிக்கு 193 பேர் போட்டியிடுகின்றனர். 755 மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு 7,156 பேர் பேரும், 125 நகராட்சி தலைவர் பதவிக்கு 1,086 பேரும், 3,697 நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு 20,999 பேரும், 529 பேரூராட்சி தலைவர் பதவிக்கு 3,402 பேரும், 8,303 பேரூராட்சி கவுன்சிலர் பதவிக்கு 32,751 பேரும், 12,524 கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 50,680 பேரும், 

99,333 கிராம பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிக்கு 2 லட்சத்து 58,673 பேரும், 655 மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிக்கு 3,757 பேரும், 6,471 பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலர் பதவிக்கு 32,480 பேரும் போட்டியிடுகிறார்கள். 1 லட்சத்து 32,401 உள்ளாட்சி பதவிக்கு மொத்தம் 5 லட்சத்து 27,875 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 10,076 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 

86,983 பேர் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர். தமிழகம் முழுவதும் 19,646 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 57 உள்ளாட்சி இடங்களுக்கு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. அதன்படி 1,12,698 உள்ளாட்சி பதவியிடங்களில் போட்டியிட இறுதியாக 4 லட்சத்து 11,177 பேர் களத்தில் உள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக