AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

புதன், 26 அக்டோபர், 2011

ஐக்கிய ஆப்பிரிக்க கனவு சிதைந்தது! ஏகாதிபத்திய எதிர்ப்பாளர் கடாபி வீழ்த்தப்பட்டார்!

சிஐஏ செய்த கொலை
42 ஆண்டுகாலம் லிபியாவின் அதிபராக இருந்த முஅம்மர் கடாஃபி சி.ஐ.ஏ வால் பயிற்றுவிக்கப்பட்ட கூலிப்பட்டாளத்தால் 21.10.2011 அன்று இரக்க மின்றி சுட்டுக் கொல்லப்பட்டார்.

மேற்குல ஆக்கிரமிப்பு படைகளான நேட்டோப்படைகள் கடாபியை அங்கே இங்கே நகரவிடாமல் அவரது சொந்த ஊரிலேயே முடக்கிப் போட்ட நிலையில் அங்கும் ஆயுதம் ஏந்தி மாறுவேடத்தில் வீரர்களோடு வீரராக போர்க்களத்தில் களமாடினார்.


இரண்டு மாதங்களாகவே நேட்டோ இந்த முற்றுகையில் ஈடுபட்டிருந்தது. நேட்டோ, கடாபியின் சொந்த ஊரில் குண்டுமழை பொழிய, பதுங்கு குழியில் இருந்து கடாபி பிடிபட்டார். நேட்டோவின் குண்டு வீச்சினால் காயம் அடைந்திருந்த கடாபி, சிஜஏவின் கூலிப்படையினரால் கொல்லப்பட்டார்.

அவரை உயிரோடு பிடியுங்கள் என்ற குரல் பின்னணியில் ஒலிக்க அவர் கண்ணியக் குறைவாக அவமரியாதை செய்யப்பட்டு கூலிப்படையினரால் கொல்லப்பட்ட வீடியோ பதிவுகளை அல்ஜஸீரா தொலைக்காட்சியும் இணைய தளமும் வெளியிட்டிருந்தன.

உயிரோடு பிடிக்காதது ஏன்?

கடாபியை உயிரோடு பிடித்தால் அவரால் பலன் அடைந்த ஐரோப்பிய புள்ளிகள் குறித்த விவரங்கள் அனைத் தையும் அம்பலப்படுத்தி விடுவார் என்ற அச்சத்தின் காரணமாக கடாபி மீது பகிரங்க விசாரணை நடத்த அஞ்சி அவரை வஞ்சகமாக வீழ்த்திவிட்டனர்.
ஐரோப்பிய நாடுகள் பெரும்பாலானவை அமெரிக்காவோடு நெருக்கமாக உறவாடிக் கொண்டே கடாபியின்லிபியாவுடனான வர்த்தகப் பலன்களையும் அனுபவித்த சக்திகள் கடாபியின் கொடூரக் கொலை யைக் கண்டிக்கவில்லை.

விசாரணை என்றால் வில்லங்கள் தான் கடாபியை விசாரணை வளையத்தில் கொண்டு வந்து அமெரிக்க அடி வருடி நீதிமன்றத்தை வைத்து அநீதியாய் தீர்ப்பு வாசித்து தூக்குத் தண்டனை விதித்தால் கூட ஈராக்கின் சதாம் ஹுஸைன் போல மரணத்தை துணிச்சலுடன் எதிர்கொண்டு ஏகாதிபத்திய சக்திகளையும் அவர்களின் அடிவருடிகளையும் இழிவுபடுத்தி விட்டால் என்ன செய்வது. சதாம் ஹுஸைனைப் போல மறக்க முடியாத மாவீரனாக வரலாற் றில் இடம்பிடித்து விட்டால் அதனை தங்களால் சகித்துக் கொள்ள முடியாது என்ற காரணத்தால் கடாபியின் கதையை ஒரு தெருச்சண்டையிலே முடித்துவிட்டார்கள் ஆக்கிரமிப்பு சக்திகள்.

மனிதஉரிமை - விநோத கோமாளிகள்

21ம் நூற்றாண்டில் மனித உரிமை மாண்புகள் தழைத்தோங்கி இருப்பதாக எட்டுதிக்கும் பரப்புரை செய்யப்படுகிறது. ஆனால் விலங்குகளைக் கொன்றால் கூட சட்டம் கடுமையாகப் பாய்ந்து தண்டிக்கும் என எச்சரிக்கப்படுகிறது. கொடும் குற்றங்களை இழைத்த குற்றவாளிகளுக்கு விதிக்கப்படும் மரண தண்டனைகள் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவாக எழுப்பப்படுகிறது. இன்றைய உலகில் 138 நாடுகளில் மரணதண்டனை ஒழிக்கப் பட்டுவிட்டதாக பெருமைபட்டுக் கொள்ளும் இந்த நவீன யுகத்தில் ஒரு நாட்டின் அதிபரை வெளிநாட்டு சக்திகளின் கூலிப்படையினர் அநாதைபோல் கொன்றதை ஏனென்று கேட்க இந்த பூமிப்பந்தில் யாருமே இல்லை.

70வயது முதியவரை தான் தோன்றித் தனமாக குதறியதை இந்த உலகம் பார்த்துக் கொண்டுதான் இருந்தது. ஆக்கிரமிப்பு சக்திகள் தங்கள் வெறியினை தீர்த்துக் கொள்ள இந்த காட்டுமிராண்டித் தனத்தை செய்திருந்தால் கூட எழுத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம், ஊடக தர்மம் பற்றியெல்லாம் வாய் கிழியப் பேசியவர்கள் எல்லாம் கடாபியின் கொடூர மரணம் குறித்து சிறிய முனகலைக்கூட எழுப்பவில்லை.

கடாபி வீழ்ந்ததால் லிபியா கொண்டாட் டத்தில் மூழ்கியதாக கூறிய ஊடகங்கள் எல்லாம் துப்பாக்கிகளை வானத்தை நோக்கி சுடும் கூலிப்பட்டாளத்தை காட்சிகளாகக் காட்டினர். லிபிய மக்கள் உற்சாகம் என தொடர்ந்து செய்திகள் வாசிக்கப்பட்டன. கடாபியின் கொடூர மரணம் கூறும் வன்மை யான செய்தியாகவே சமூக நல ஆர்வலர்கள் இதனை எடுத்துக் கொள்ள முடியும்.
எவ்வளவு பலவீனமான பிராணி பாதிக்கப்பட்டாலும் அதனை எதிர்த்து எழும் குரல்கள் கடாபியின் கொடூர மரணம் குறித்து குரல் எழாதது ஏன்? இவர்களாகவே எழுதப்படாத ஒரு ஒப்பந்தத்தை தங்கள் இதயங்களிலே தாரக மந்திரமாக பதித்திருக் கிறார்கள் என்பது புலனாகிறது.

கறுப்பு புஷ்ஷும் வெறுப்பு மனசும்

கொல்லப்படுபவனின் சமயம் (இஸ்லாம்), அநியாயத்திற்கு இலக்காகுபவனின் இனம் (அரபு இனம்) கொல்லப்படுபவனின் கொள்கை (ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு) போன்றவைகளின் அடிப்படையிலேயே இவர்களின் எதிர்ப்பு மற்றும் ஆதரவு அமைகின் றன என்றால் அது மிகையல்ல. இந்த ஒரு விஷயத்தில் வெள்ளை மாளிகையில் திரியும் கறுப்பு புஷ்ஷான ஒபாமாவும் இவர்களும் ஒரே வரிசையில் வைக்கத்தக்கவர்கள் என்றால் அது மிகையில்லை.

சர்வாதிகாரத்திற்கு எதிரான போரா இது?

கடாபிக்கு எதிரான போர் சர்வாதிகாரத் திற்கு எதிரான போர் என்றும் மக்களே தன்னெழுச்சியாக இந்தப் புரட்சியை நடத்தினர் என்று மிகையாக பரப்புரை செய்யப்பட்ட லிபியா மீதான தாக்குதலை துனிஷியா, மற்றும் எகிப்து நாடுகளில் நிகழ்ந்த மக்கள் புரட்சியோடு ஒப்பிட முடியாது என்பது நிதர்சனமான உண்மையாகும்.

எகிப்திலும் துனிசியாவிலும் மக்கள் புரட்சி வெடித்தாலும் முந்தைய சர்வாதிகாரிகள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏதும் நிகழவில்லை, எகிப்தின் ஹோஸ்னி முபாரக்கும், துனிஷி யாவின் பென் அலி ஜெயினுல் ஆபுதீனும் இன்றுவரை எவ்வித சேதார மில்லாமல் வாழ்கிறார்கள். ஆனால் லிபியாவில் நிலைமையே வேறு. கடாபியை வீழ்த்தியதாகக் கூறும் மேற்குலக கூட்டுக்களவானிகள் சொல்வது என்ன தெரியுமா? லிபியாவில் தற்போது ஏற்பட்டிருக்கும் மாற்றத்திற்கு தாங்களே காரணம் என கர்வத்துடன் கூறிக் கொண்டிருந்த மேற்கு நாடுகள் லிபியா அதிபர் கடாபியை இறுதிவரை பயன்படுத்தி பலனடைந்தன. கடாபி வீழ்த்தப்பட்ட பிறகு பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் நேட்டோப்படைகளின் தாக்குதலில் தங்கள் நாட்டுப் படைகளின் பங்கு மிகவும் முக்கியமானது என பெருமையடித்துக் கொண்டார்.

கடாபியின் ஆட்சியில் அதிகம் பலனடைந்த நாடுகளில் பிரிட்டன் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெறுகிறது. கடந்த ஆண்டு 55 மில்லியன் டாலர்களுக்கு ராணுவத் தளவாடங்களை ஏற்றுமதி செய்துள்ளது. அதில் ஷிழிமிறிணிஸி ஸிமிதிலிணிஷி, குண்டுதுளைக்காத சட்டைகள் உள்பட பல உபகரணங்களை பிரிட்டன் கொள்ளை லாபம் வைத்து லிபியாவுக்கு விற்றது. கடாபியின் மகன்களில் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருந்த ஹாமிஸ் பிரிகேட் என்ற படைக்கு பயிற்சி கொடுத்தவர்களே பிரிட்டிஷ் படையினர் தான் என்ற தகவல் இப்போது வெளிவந்துள்ளது. 85 மில்லியன் பவுண்ட்ஸ் ஒப்பந்தப் பணமாக வாங்கிக் கொண்டுதான் பயிற்சி கொடுத்தனர்.

ஆனால் கடாபி வீழ்த்தப்பட்ட பிறகு பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் சொல்கிறார் "கடாபியால் பாதிக்கப்பட்ட அனைவரும் நினைத்துப் பார்க்க வேண்டிய நேரம் இது" என்றார். இறுதிவரை ரத்தத்தை உறிஞ்சுவதைப் போல பலனை அனுபவித்துக் கொண்டு இப்போது தடம் புரண்டு பேசும் மேற்குலக சக்திகளின் இரட்டை வேடம் மெல்ல மெல்ல அம்பலப்பட்டு நிற்கிறது.
கடந்த ஆண்டு ஜி8 நாடுகளின் உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் லிபிய அதிபர் கடாபியுடன் கைகோர்த்து நேசத்துடன் உரையாடினார். ஒபாமா வெற்றிபெற்ற போது, "எம் ஆப்பிரிக்க சகோதரரை வாழ்த்துகிறேன்" என பெருமிதப்பட்டார் கடாபி. அத்தனை யும் பொய்யாக்கி பழங்கதையாக்கின மேற்குலக சக்திகள்.

அக்டோபர் 14ம் தேதி அமெரிக்க அதிபர் ஒபாமா உகாண்டாவுக்கு படை ஒன்றை அனுப்பினார். அடுத்த சில மாதங்களில் தெற்கு சூடான், காங்கோ, மற்றும் தென் ஆப்பிரிக்கக் குடியரசு உள்ளிட்ட நாடுகளுக் கும் படைகள் அனுப்பப்படும் என்றும் ஒபாமா அறிவித்திருக்கிறார்.

இன்று உலகம் முழுவதும் 75 நாடுகளில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளின் படைகள் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. விரைவில் ஆக்கிரமிப்பு சக்திகளின் துருப்புகள் 120 நாடுகளில் நிலை நிறுத்தப் படும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது ஆப்பிரிக்க நாடுகளில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேற்கத்திய துருப்பு கள் நிலை கொண்டுள்ளன. ஒன்றுபட்ட ஆப்பிரிக்க கண்டத்தை கனவு கண்ட, லிபிய மக்களுக்கு எல்லாமுமாக விளங்கிய கடாபி அம்மக்களுக்கு செய்த சேவைகளையும், கடாபியை வீழ்த்திய நாடுகளின் நிர்வாக சிறப்பினையும் ஒப்பிட்டுப்பார்த்தால் உண்மையில் மக்கள் புரட்சி என்று ஒன்று வெடித்தால் எங்கே வெடிக்கும், அல்லது வெடித்துக் கொண்டிருக்கிறது என்பதை உணர முடியும்.

லிபியாவில் மின்கட்டணம் என்பதே கிடை யாது. அனைவருக்கும் மின்சாரம் இலவசம். நாட்டு மக்கள் அனைவருக்கும் வங்கிக் கடன் எளிதாக்கி வழங்கப்படுகிறது. வட்டியும் கிடையாது.

புதிதாக திருமணம் ஆன தம்பதிகளுக்கு அவர்கள் புதிய வீடு வாங்குவதற்காக 60 ஆயிரம் தினார்கள் அன்பளிப்பாக வழங்கப் பட்டது. கல்வி மற்றும் மருத்துவ செலவுகள் லிபியாவிலுள்ள அனைத்து குடிமக்களுக்கும் இலவசமாக வழங்கப்பட்டது. கடாபி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கல்வியறிவு பெற்றோர் 25 சதவீதமாக இருந்தனர். கடாபி ஆட்சிக்கு வந்த பிறகு கல்வியறிவு பெற்றோர் 83 சதவீதமாக உயர்ந்தனர்.

லிபிய நாட்டுக் குடிமகன் விவசாயம் செய்ய விரும்பினால் நிலம், பண்ணை வீடு, வேளாண் உபகரணங்கள், விதைகள் உள்பட அனைத்து உதவிகளும் கடாபியின் அரசே இலவசமாக வழங்கியது. லிபியக்குடிமகன் வெளிநாடு சென்று சிகிச்சை பெற விரும் பினால், வெளிநாடு சென்று கல்வி கற்க விரும்பினால் கடாபியின் அரசு அனைத்து நிதி உதவிகளையும் வழங்கியது. அது மட்டுமின்றி குடியிருக்கும் விடுதிக்கும கார் வாகனத்திற்கும் அலவன்ஸாக 2 ஆயிரத்து 300 டாலர்களும் வழங்கப்பட்டது.

அது மட்டுமா? ஒரு லிபியக்குடிமகன் கார் வாங்க விரும்பினால் அவன் வாங்க விரும்பும் காரின் விலையில் 50 சதவீதம் கடனாக வழங்கப்பட்டது. பெட்ரோல் விலை லிபியாவில் வெறும் 0.14 டாலர்கள் தான்.

கடாபியின் லிபியாவுக்கு வெளிநாட்டுக் கடன்கள் கிடையாது. 15 ஆயிரம் கோடி டாலர்களை உலகமெங்கும் உள்ள வங்கிகளில் சேமித்து வைத்திருக்கும் கடாபி எங்கே. உலக நாடுகளை சுரண்டி கொழுக்கும் மேலை நாடுகள் எங்கே. அந்த சிறந்த மனிதன் நதிநீர் பாசன திட்டத்தை செயல்படுத்தி வறண்ட பூமியை செழிக்கச் செய்தவன். 2700 கோடி நதிநீர் திட்டத்தின் மூலம் அற்புதங்களை நிகழ்த்தினார் கடாபி.

ஒரு வேலை வாய்ப்பில்லாத லிபியக் குடிமகன் ஒருவன் அல்லது ஒருத்திக்கு வேலை கிடைக்கும் வரை அவனது வாழ்வாதாரத்துக்கு தேவையான நிதி உதவி கடாபியின் லிபியாவில் கிடைத்துக் கொண்டிருந்தது. லிபியா எண்ணெய் விற்பனையின் லாபம் ஒவ்வொரு லிபிய குடிமகனின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டது. குழந்தையை பெற்றவுடன் அதன் தாய்க்கு 5 ஆயிரம் டாலர்கள் பரிசாக வழங்கப்பட்டது கடாபியின் லிபியாவில்.

இவை மட்டுமா? 40 துண்டுகள் கொண்ட ஒரு பிரட் பாக்கெட்டின் விலை 0.15 டாலர் மட்டுமே. பிறந்தால் லிபியாவில் பிறக்க வேண்டும் என ஏங்கும் வண்ணம் எல்லாருக்கும் எல்லாமும் வழங்கிய முஅம்மர் கடாபி எங்கே? நிஸிணிகிஜி விகிழி விகிஞிணி ஸிமிக்ஷிணிஸி றிஸிளியிணிசிஜி என அறியப்பட்ட மிகப்பெரிய நீர்ப்பாசன திட்டம் வழங்கியவர் சர்வாதிகாரியாம். இன்னமும் நதிகளை இணைக்க முடியாமல் தவிப்பதோடு மாநிலங் களுக்கு இடையில் கருத்து வேறுபாட்டைக் களைய முடியாதவர்கள் ஜனநாயக வாதிகளாம்? இது என்ன விபரீத நகைச்சுவை பார்த்தீர்களா?

ஒருங்கிணைந்த ஆப்பிரிக்காவை கனவு கண்டார் கடாபி. ஆப்பிரிக்க மக்களுக்கான பொதுநிதியம் ஏற்படுத்தி ஏழை ஆப்பிரிக்க நாடுகளுக்கு வட்டியில்லாமல் கடனுதவி வழங்கினார். சூடான்&எரித்ரியா மெகா நெடுஞ்சாலை திட்டத்திற்கு வாரி வாரி வழங்கினார். சோமாலியா, சூடான் உள்ளிட்ட ஏழை நாடுகளுக்காக ஆதரவுக் கரம் நீட்டிய கரம் இன்று சாய்ந்துவிட்டது.

ஆனால் கடாபியை வீழ்த்தியவர்கள் கடன் சுமையால் தத்தளிக்கும் பொதுமக்களின் எதிர்ப்பலையைத் தாங்க முடியாமல் திணறுகின்றனர். பசிக்கிறதா பணக்காரனை தின்னு, ஆள்பவனை அடித்து தின்னு என்ற கோஷத்தோடு அமெரிக்க நகர வீதிகளில் முழக்கங்கள் எழுப்பப்படுகிறது. சுரண்டலில் கொழித்த கற்பனைக் கோட்டைகள் இன்று மளமளவென சரிந்தன.

ஆக்கிரமிப்பு சக்திகள் இன்று தங்கள் சுரண்டலுக்கு இடையூறாக இருந்தவரை முழுமையான ஏகாதிபத்திய எதிர்ப்பாளரை வெறி கொண்டு வீழத்தியிருக்கிறார்கள்.

கடாபியின் கொலையை கொண்டாட்டமாக மாற்றிய சில உளுத்தர்களின் குதூகலம் கூக்குரலாக மாறும் நாள் தொலைவில் இல்லை. ஏகாதிபத்திய சக்திகள் வீழும் நாளும் தான்.

-அபுசாலிஹ்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக