பணநாயகத்தை தாண்டி நாங்கள் வெற்றிபெற்றுள்ளோம்
வாக்களித்தவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், இராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை
மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு எங்களுக்கான களத்தைஉறுதிப்படுத்தியிருக்கிறோம்.
மாநகராட்சி கவுன்சிலர் 1, நகராட்சி உறுப்பினர்கள் 14, பேரூராட்சி உறுப்பினர்கள் 40 உள்ளிட்ட 140
இடங்களில் மனிதநேய மக்கள் கட்சியினர் வெற்றிப் பெற்றுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் வந்துள்ளனர்.
கூத்தாநல்லூர் நகராட்சி தலைவர் தேர்தலில் மூன்றாவது இடத்தையும், லால்பேட்டை பேரூராட்சி தலைவர்
தேர்தலில் 54 ஒட்டுகளில் வெற்றி வாய்ப்பையும் இழந்து இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளோம். பரவலாக முதல் ஐந்து இடங்களில் இடம்பெற்று பணநாயகம் தலைவிரித்தாடிய கடும் போட்டியில் ஜனநாயகத்தை காப்பாற்றியுள்ளோம். பல முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் எங்களுக்கு அடுத்து வரக்கூடிய நிலையையும் களத்தில் நிலை ஏற்படுத்தியுள்ளோம்.
அடிப்படை செலவுகளை கூட ஈடுகட்ட முடியாத பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் மமக வேட்பாளர்கள் பல முனை போட்டிகளை எதிர் கொண்டு வாகை சூடியுள்ளனர். தமிழகத்தில் ஓரிரு இடங்களை தவிர்த்து பெரும்பாலான இடங்களில் அரசியல் கட்சிகளும், பல சுயேச்சைகளும் கூட வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வாக்குகளை பெற்றுள்ளனர். இதனால் பல இடங்களில் எங்களது வெற்றிகளை பாதிக்க செய்துள்ளனர். பணம் ஆதிக்கம் நடைபெறாமல் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கைகளை எடுத்திருந்தால் மமக உட்பட பல கட்சிகள் கூடுதல் இடங்களை பெற்றிருப்பார்கள்.
அதையும் தாண்டி எங்களுக்கு 140 இடங்களின் வெற்றியை தந்த தமிழக மக்களுக்கு எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதும், வாக்காளர்கள் பணம் பெறுவதும் ஜனநாயக குற்றம் என்பதை வலியுறுத்தி தொடர்ந்து பரப்புரைகளை மேற்கொள்வோம். வழக்கம்போல் எமது அரசியல் பணிகளை, தேர்தல் வெற்றி தந்த உற்சாகத்தோடும், கூடுதல் பொறுப்புகளோடும் தொடர்வோம்.

அன்புடன்
எம்.ஹெச்.ஜவாஹிருல்லா
எம்.ஹெச்.ஜவாஹிருல்லா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக