AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

வியாழன், 6 அக்டோபர், 2011

உங்கள் இதயம் பாதுகாக்க சாக்லேட் உதவி செய்யும்?? – ஆராய்ச்சி தகவல்

விஞ்ஞானிகள் கூறிகிறார்கள், சாக்லேட் சாப்பிட்டால் இருதய நோய்களிடம் இருந்து தப்பிக்கலாம்!
114,009 நோயாளிகளிடம் இருந்து எடுக்கப் பட்ட ஆராய்ச்சியில், 3 இல் ஒரு பங்கு அளவிற்கு இருதய நோய் அபாயத்தை இவர்கள் கடந்து விட்டார்கள் என அந்த ஆராய்ச்சியில் கூறப்படுகிறது!
விநோகமாக இருக்கிறதா!! ? இதனால் இனி உங்கள் பிள்ளைகள் இந்த ஆராச்சியை காரணம் காட்டி அதிகம் சாக்லேட் சாப்பிடுவார்கள் போலும்!! :)
ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்ட இரண்டு வகை மக்களை ஆய்வு செய்தனர், ஒரு பிரிவு வாரத்திற்கு 2 க்கும் அதிகமான சாக்லேட் பார்கள் என சாப்பிடும் பழக்கம் கொண்டவர்கள், மற்றொரு பிரிவு அதைவிட குறைவாக சாப்பிட கூடியவர்கள்.
இவர்களில் அதிக மாக சாக்லேட் சாப்பிடுபவர்கள் தான் மூளை மற்றும் இருதய நோய்களில் தாக்கம் குறைவாக உள்ளது என தெரிய வந்துள்ளதாக கூறுகிறார்கள்.
இருப்பினும், மிக அதிகமாக சாக்லேட் சாப்பிடுவதால் நீரிழுவு மற்றும் இதர நோய்கள் ஏற்பட காரணமாக இருக்கும். ஜாக்கிரதை அன்பர்களே!!
ஓர் அட்வைஸ் ஆக Dr. பிரான்கோ கூறுகையில், ” இந்த ஆராய்ச்சி சாக்லேட் சாப்பிடாதவர்கள் சாப்பிட வேண்டும் என்பதற்காக இல்லை, சாக்லேட் சாப்பிடுபவர்கள் அளவோடு குறிப்பிட்ட கால இடைவெளியில் சாப்பிட வேண்டும்.
மேலும் நீங்கள் தினமும் அதிக சாக்லேட் சாப்பிடுவீர்கள் என்றால், உங்கள் உடல் எடை ஏற வாய்ப்பு மிக அதிகம் ஜாக்கிரதை :)
இதை படிப்பவர்களுக்கு, நாம் சொல்வதென்றால் வாரத்திற்கு மூன்று தடவை என்ற முறையில் சாப்பிடுவது நல்லது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக