உள்ளாட்சி தேர்தல் வருகிற 17 மற்றும் 19-ந் தேதிகளில் 2 கட்டங்களாக நடக்கிறது. இந்த தேர்தலில் மாநகராட்சி மற்றும் நகராட்சி தேர்தலுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.
சென்னை மேயர் தேர்தலில் 32 பேர் போட்டியிடுகின்றனர். எனவே 2 எந்திரங்கள் இணைக்கப்படும் என்று தெரிகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் இந்த தேர்தலில் பயன்படுத்தப்படுகிறது.
மேலும் தேவைக்கேற்ப கூடுதல் எந்திரங்கள் காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளன. இந்த எந்திரங்கள் அனைத்தும் வேளச்சேரி மற்றும் நம்மாழ்வார்பேட்டையில் குடோன்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக எந்திரங்களை சரிபார்த்து சோதனை செய்யும் பணி தொடங்கி உள்ளது. இதற்காக பெங்களூரில் இருந்து 15 என்ஜினீயர்கள் வந்துள்ளனர். அவர்கள் வாக்குப்பதிவு எந்திரங்களை பரிசோதித்து வருகிறார்கள்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக