AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

வெள்ளி, 7 அக்டோபர், 2011

உள்ளாட்சித் தேர்தல்: பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீசார்- வாக்காளர்களை ஒழுங்கு படுத்த என்.சி.சி.மாணவர்கள் தேர்வு


தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 17,19-ந்தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. மாநகராட்சி பகுதிகளில் 17-ந்தேதியும், மற்ற பகுதிகளில் 19-ந்தேதியும் ஓட்டுப்பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய இன்னும் 8 நாட்களே உள்ளன. இதனால் ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது.
ஊரகப் பகுதிகளுக்கான 4 வண்ணவாக்குச் சீட்டுக்கள் சென்னை, விழுப்புரத்தில் உள்ள அரசு அச்சகங்களில் அச்சடிக்கப்பட்டு வருகின்றன. அதுபோல் மாநகராட்சி பகுதிகளில் மின்னணு எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வாக்காளர்களின் விரலில் வைக்கப்படும் அழியாத மை உள்பட அனைத்துப் பொருட்களும் தயார் செய்யப்பட்டு வருகிறது. ஓட்டுச்சாவடி அதிகாரிகள், பணியாளர்களுக்கு உரிய பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சித் தேர்தலுக்காக 85 ஆயிரத்து 647 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படுகின்றன. இதில் 47 ஆயிரத்து 627 வாக்குச்சாவடிகளில் 17-ந்தேதியும், 38 ஆயிரத்து 20 வாக்குச் சாவடிகளில் 19-ந்தேதியும் தேர்தல் நடைபெறும். தேர்தல் களத்தில் சுமார் 4 1/2 லட்சம் வேட்பாளர்கள் உள்ளபோதிலும், அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள்தான் வீடுவீடாக சென்று ஓட்டு வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
கடைசி 4 நாள் பிரசாரம் தீவிரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்ப பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகிறார்கள். பாதுகாப்புக்காக அனைத்து மாவட்டங்களிலும் தனிதனி படைகள் உருவாக்கப்பட்டுள்ளன. போலீஸ் ஐ.ஜி.அலெக்சாண்டர் மோகன், போலீஸ் சூப்பிரண்டு மோகன் ஆகியோர் தலைமையில் பாதுகாப்பு பணிகள் செய்யப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் சுமார் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். ஓய்வு பெற்ற போலீஸ்காரர்களையும் ஓட்டுச்சாவடிகளில் பாதுகாப்பு பணிக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஓய்வு பெற்ற போலீஸ்காரர்கள் தங்கள் பெயரை முறைப்படி பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
தேர்தல் பாதுகாப்பு பணிக்கு சுமார் 3 ஆயிரம் வெளிமாநில போலீசார் வரவழைக்கப்படுவார்கள் என்று முன்பு தகவல்கள் வெளியானது. 2006-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலின்போது ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் இருந்து ஆயுதப்படை போலீசார் தமிழ்நாட்டுக்கு வந்தனர். இந்த ஆண்டும் ஆந்திரா, கர்நாடகா, கேரளாவில் இருந்து சிறப்புப்படை போலீசார் வருவார்கள். தமிழ்நாடு முழுவதும் பதற்றமான ஓட்டுச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ள சுமார் 2 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் வெளிமாநில போலீசார் நிறுத்தப்படுவார்கள்.
மதம், சாதி ரீதியிலான பகுதிகளில் கலவரம் ஏற்படுவதை தடுக்கவும், ஓட்டுச்சாவடிகளில் சூறையாடப்படுவதைத் தடுக்கவும், சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஓட்டுப்பதிவு நடக்கும் 17,19-ந்தேதிகளில் அதிரடிப்படை வீரர்களைக் கொண்ட மொபைல் கண்காணிப்பு வா

0 கருத்துகள்:

கருத்துரையிடுக