கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே வீராணம் ஏரி உள்ளது. காவிரி கடைமடை பகுதியான இந்த ஏரியில் இருந்து 70 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. மேலும் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கும் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.
இந்த நிலையில் பருவமழை தொடங்கி உள்ளதால் வீராணம் ஏரி நிரம்பி வருகிறது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.5 கன அடியாகும். கடந்த 3 நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் தற்போது இந்த ஏரிக்கு கீழணையில் இருந்து வடவாறு வழியாகவும் பல்வேறுநீர் ஆதார வாய்க்கால் மூலமும் தண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் பாதுகாப்பை கருதி சேத்தியாதோப்பு வி.என்.எஸ். மதகு வழியாக 400 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக