கெமிக்கல் இன்ஜினியரிங் (Chemical Engg) முடிக்கவிருக்கும் நான் எண்ணெய் நிறுவனங்களில் பணி பெற நேரடியாக விண்ணப்பிக்க முடியுமா?
- Anbu, Karaikudi
பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களில் தான் உங்களது தகுதிக்கான அதிக வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் இன்னும் உங்களின் திறமைகளை வளர்த்து கொள்வது இன்றைய போட்டி உலகத்தில் அவசியமான ஒன்றாக ஆகிவிட்டது.
இவற்றுக்குப் பொதுவாகவே ஒரு போட்டித்தேர்வு நடத்தப்பட்டு உங்களது அடிப்படை தகவல் தொடர்புத் திறன், ஆங்கிலத் திறன், பகுத்தாராயும் திறன், பொது அறிவு, பாடத் திறன் ஆகியவை அறியப்பட்டு உங்களுக்கு நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளும் வாய்ப்பு தரப்படுகிறது. அதிலும் நீங்கள் தகுதி பெற்றால் தான் இப்பணிகளில் சேர முடியும்.
இதற்கேற்ப Aptitude பயிற்சிகள், செய்து பார்க்கும் வகையில் அமைந்துள்ள புத்தகங்கள், மேலும் Current Affairs , Group Discussion பயிற்சிகள்.. இவற்றின் மூலம் உங்களுக்கு எளிதில் இந்நிறுவனங்களில் வேலை கிடைக்கும். பயிற்சி நிறுவனங்களை நம்புவதை விட, நீங்களே முயற்சி எடுப்பது தான் சால சிறந்தது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக