AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

புதன், 26 அக்டோபர், 2011

கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினை: அப்துல் கலாம் ஆய்வு செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது; அணுஉலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் பேச்சு


ராதாபுரம், அக்.26-
 
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கூடங்குளம் உள்ளிட்ட கடற்கரையோர கிராம மக்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். 3-வது கட்டமாக ஒவ்வொரு கிராம மக்களும் ஒவ்வொரு நாள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
 
இந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து, உண்ணாவிரதத்தில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்கின்றனர்.   இடிந்தகரை புனித லூர்து அன்னை ஆலய வளாகத்தில் நடந்து வரும் உண்ணாவிரதத்தில் நேற்று பெரியதாழை-கூடுதாழை மக்கள் கலந்து கொண்டனர். இதில் ஆண்கள், பெண்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
 
இந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கூடங்குளம், இடிந்தகரை உள்ளிட்ட கிராம மக்களும் கலந்து கொண்டனர்.   உண்ணாவிரத போராட்டத்தில் பேசிய அணுமின் நிலைய எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் பேசுகையில், அப்துல் கலாம் வாழ்நாள் முழுவதும் இந்திய அரசு சார்ந்த விஞ்ஞானி. இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தத்தின்போது, கம்யூனிஸ்டுகள் மன்மோகன்சிங் அரசுக்கு கொடுத்த ஆதரவை வாபஸ் வாங்கினர்.
 
அப்போது மன்மோகன்சிங் அரசு கவிழாமல் இருப்பதற்காக அமர்சிங், முலாயம்சிங் ஆகியோரிடம் பேசி சமரசத்துக்கு ஏற்பாடு செய்தவர் அப்துல் கலாம். அப்படிப்பட்டவர், இன்று கூடங்குளம் வந்து ஆய்வு செய்தால், அவரது முடிவு அரசு சார்ந்த முடிவாக இருக்கும். எனவே அவர் கூடங்குளம் வந்து ஆய்வு செய்வதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
 
அவர் ஆய்வு செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது, என்றார்.  

0 கருத்துகள்:

கருத்துரையிடுக