சென்னை : சென்னை, பாரிமுனையை சேர்ந்த சிவக்குமார் என்பவர், சென்னை உயர்நீதிமன்றம் தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனுவில், ÔÔஎனது மகளுக்கு 18 வயது பூர்த்தியாகவில்லை. அன்பு என்பவர் அவரை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டார். மைனரான என் மகளை என்னிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்ÕÕ என கூறியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் கே.என்.பாட்ஷா, சுதந்திரம், நாகமுத்து ஆகியோர் விசாரித்தனர். இந்த வழக்கில் நேற்று நீதிபதிகள் அளித்த தீர்ப்பு விவரம்: ÔÔகுழந்தை திருமண தடை சட்டத்தை போலீசார் தீவிரமாக அமல்படுத்த வேண்டும். மைனரை திருமணம் செய்யும் ஆண்கள் மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்து, புலன் விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும். இதில் அதிக பட்சம் 2 ஆண்டு சிறை தண்டனை வழங்க வேண்டும்.
மைனர் பெண் தடை சட்டத்தை அமுல்படுத்த அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசாரும் இதில் உடனே வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். இதுபற்றி பெண்கள் பள்ளி, கல்லூரிகளில் பிரசாரம் செய்ய வேண்டும். இதுதொடர்பாக பத்திரிகைகளில் அரசு விளம்பரம் செய்ய வேண்டும்.
18 வயதுக்கு முன்பு திருமணம் செய்து கொள்ளும் பெண்கள் பெற்றோருடன் செல்ல விரும்பாவிட்டால் அவர்களை அரசு நடத்தும் சிறுவர் சீர்திருத்த காப்பகத்தில் வைக்க வேண்டும். இந்த வழக்கிற்கும் இந்த உத்தரவு பொருந்தும், மைனர் பெண்ணை திருமணம் செய்வது செல்லாது. இருந்தாலும் அதை செல்லாது என்று மைனர் மேஜரான பிறகு கூறமுடியாது. திருமணம் செய்பவர் பாதுகாவல் என கூறமுடியாதுÕÕ என நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக