இந்திய பணக்காரர்களின் பட்டியலை போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலை நிலவுவதால், அதில் பல கோடீசுவரர்கள் கடும் இழப்பை சந்தித்து இருப்பது இந்த பட்டியல் மூலம் தெரிய வந்துள்ளது.
போர்ப்ஸ் நிறுவன கணிப்புப்படி தொழில் அதிபர் முகேஷ் அம்பானி முதல் இடத்தைப் பிடித்துள்ளார். அவரது மொத்த சொத்து மதிப்பு 22.6 பில்லியன் டாலராகும். முகேஷ் அம்பானி தொடர்ந்து 4-வது ஆண்டாக இந்திய பணக்காரர்களில் முதல் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
2-வது இடத்தில் தொழில் அதிபர் லட்சுமிமிட்டல் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 19.2 பில்லியன் டாலர்களாகும். விப்ரோ நிறுவனர் அஜிம்பிரேம்ஜி 3-வது இடத்தில் உள்ளார். பணக்காரர்கள் வரிசையில் 5-வது இடத்தை சாவித்ரி ஜிண்டால் எட்டியுள்ளார். அவரது சொத்து மதிப்பு 9.5 பில்லியன் டாலராகும்.
இந்திய பணக்கார பெண்களில் சாவித்ரி முதல் இடத்தை பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு பணக்காரர்கள் பட்டியலில் இருந்த பலர் இந்த தடவை காணாமல் போய் விட்டனர். முன்பு 2-வது பணக்காரராக இருந்த அனில்அம்பானி தற்போது 13-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். முதல் 100 பணக்காரர்கள் வரிசையில் புதிதாக 14 பேர் இடம் பிடித்துள்ளனர். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கிய ஷாகித் பல்வா பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.







0 கருத்துகள்:
கருத்துரையிடுக