புதுடெல்லி, அக் 28-
இந்தியா முழுவதிலும் நடைபெற்றுள்ள குற்றச்சம்பவங்கள், விபத்துகள் பற்றிய தகவல்கள் தேசிய குற்ற ஆவண காப்பகம் மூலம் சேகரிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் நடைபெற்ற குற்றச் சம்பவங்கள் பற்றிய பட்டியல் டெல்லியில் வெளியிடப்பட்டது. உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இதனை வெளியிட்டார்.
அதில் இடம் பெற்றுள்ள விவரங்கள் வருமாறு:-
கடந்த ஆண்டு இந்தியா முழுவதும் 1 லட்சத்து 35 ஆயிரத்து 599 பேர் தற்கொலை செய்துள்ளனர். நாட்டில் உள்ள மாநிலங்களில் தமிழ்நாட்டில்தான் அதிகம் பேர் தற்கொலையால் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். கடந்த ஆண்டு தமிழ்நாட்டில், 16 ஆயிரத்து 561 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2009-ம் ஆண்டில் 14 ஆயிரத்து 424 பேர் தற்கொலை செய்திருந்தனர். இதனுடன் ஒப்பிடும்போது கடந்த ஆண்டைவிட 14.8 சதவீதம் பேர் அதிகம் தற்கொலை செய்துள்ளனர்.
சென்னையில் மட்டும் கடந்த ஆண்டு 1325 பேர் தற்கொலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் 15916 பேரும், பெங்களூரில் 1778 பேரும், டெல்லியில் 1242 பேரும், மும்பையில் 1192 பேரும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 1 மணி நேரத்துக்கு 15 பேர் தற்கொலை செய்து கொள் கிறார்கள். குடும்ப பிரச்சினை காரணமாகத்தான் பெரும் பாலானோர் உயிரை இழக்கிறார்கள்.
இவர்களில் 70.5 சதவீதம் பேர் ஆண்கள். 67. சதவீதம் பேர் பெண்கள். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேச மாநிலங் களில் 60 வயதை கடந்த பலர் தற்கொலை செய்கிறார்கள். கடந்த ஆண்டு 60 சத வீதம் பேர் முதுமை காரணமாக தற்கொலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கடந்த 1 ஆண்டில் விபத்தில் சிக்கி, தமிழ்நாட்டில் 64 ஆயிரத்து 996 பேர் உயிரிழந்துள்ளனர்.
உத்தரபிரதேசத்தில் 835 பேர் பலியாகியுள்ளனர். மாலை 6 மணியில் இருந்து 9 மணி வரை அதிக அளவில் விபத்துகள் நடைபெறுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மத்திய பிரதே சத்தில் அதிகமாகியுள்ளது. இங்கு கடந்த ஆண்டில் 3135 பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லியில் 414 பேரும், மும்பையில் 194 பேரும், புனேயில் 91 பேரும் கற்பழிக்கப்பட்டுள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக