AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

சனி, 24 செப்டம்பர், 2011

வடகொரியாவை கண்காணிக்க உளவு செயற்கை கோளை அனுப்பிய ஜப்பான்


ஜப்பானுக்கு அருகே வடகொரியா உள்ளது. ஏவுகணை தயாரிப்பு, அணு ஆயுதங்கள் தயாரிப்பு போன்ற நடவடிக்கைகளால் இந்த நாடு ஜப்பானுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. ஆனால் இதை வடகொரியா மறுத்து வருகிறது. இருந்தும் அந்த நாடு கூறுவதை ஜப்பான் முழுமையாக நம்பவில்லை.
 
எனவே, வடகொரியாவின் செயல்பாடுகளை கண்காணிக்க ரூ.2050 கோடி செலவில் புதிய செயற்கை கோளை தயாரித்துள்ளது.இந்த செயற்கை கோளை கடந்த ஆகஸ்டு மாதம் 28-ந்தேதி அதாவது 4 வாரத்துக்கு முன்பே அனுப்ப திட்டமிட்டிருந்தது. ஆனால் ஜப்பானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த புயல் மழை காரணமாக விண்ணில் செலுத்துவது தாமதமானது.
 
இந்த நிலையில் நேற்று அந்த செயற்கை கோள் எச்.2ஏ என்ற ராக்கெட் மூலம் தானேஷிமா விண்வெளி மையத்தில் இருந்து செலுத்தப்பட்டது. இந்த செயற்கை கோளை ஜப்பான் விண் வெளி ஆய்வு நிறுவனமும், மீட்சுபிஷி கனரக தொழிற்சாலையும் இணைந்து தயாரித்துள்ளது.
 
இந்த செயற்கை கோளில் சக்தி வாய்ந்த காமிரா பொருத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் வட கொரியாவின் நடவடிக்கைகள் போட்டோக்கள் மூலம் தெரியவரும். இது தவிர 2 ரேடார் செயற்கை கோள்களையும் ஜப்பான் தயாரித்துள்ளது. அவை இன்னும் 2 ஆண்டுகளில் விண்ணில் ஏவப்பட உள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக