AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

சனி, 24 செப்டம்பர், 2011

200 துண்டுகளாக உடைந்து சிதறிய அமெரிக்காவின் செயற்கைகோள் இன்று பூமியில் விழுகிறது: “நாசா” விஞ்ஞானிகள் தகவல்


விண்வெளியில் பருவ நிலை குறித்து ஆய்வு செய்ய கடந்த 1991-ம் ஆண்டு அமெரிக்கா “யூ.ஏ.ஆர்.எஸ்.” என்ற ஒரு செயற்கைகோளை விண்வெளிக்கு அனுப்பியது. அதன் ஆயுட்காலம் கடந்த 2005-ம் ஆண்டில் முடிவடைந்தது.
 
இதற்கிடையே என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அந்த செயற்கைகோள் பூமியை நோக்கி மின்னல் வேகத்தில் பாய்ந்து வருகிறது. பூமியில் மோதி 200 துண்டுகளாக சிதறி வரும். அந்த செயற்கைகோள் 700 கி.மீட்டர் தூரத்துக்கு பூமியில் விழும் என “நாசா” விண்வெளி மையம் அறிவித்துள்ளது.  
 
நேற்று இரவு 10.30 மணியில் இருந்து இன்று அதிகாலை 4.30 மணிக்கு அது பூமியில் மோதும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்னும் அது பூமியில் விழவில்லை. இருந்தாலும் அது பூமியை நெருங்கி விட்டது. இன்றுக்குள் பூமியை மோதும் என “நாசா” விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
 
ஆனால் 200 துண்டுகளாக உடைந்து சிதறிய அந்த செயற்கைகோளின் 26 பகுதி பூமியை நோக்கி வருகிறது.அதன் 500 கிலோ எடை பூமியில் விழும் என எதிர்பார்க்கப்படுகிறது.  
 
ஆனால், அது வட அமெரிக்கா கண்டத்தில் விழாது. உலகின் 70 சதவீதம் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. எனவே, அதன் துண்டுகள் கடலில்தான் விழும். எனவே, உலக மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக