AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

திங்கள், 5 செப்டம்பர், 2011

இணையதளம் செயல் இழந்ததால் பிஎட் தேர்ச்சியை பதிவு செய்வதில் சிக்கல்



கடலூர் : பிஎட் தேர்ச்சியை ஆன்லைன் மூலம் பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டதால் மாணவ& மாணவிகள் ஏமாற்றம் அடைந்தனர். பிஎட் தேர்ச்சியை ஆன்லைன் மூலம் பதிவு செய்ய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதற்காக வேலைவாய்ப்பு துறை இணையதளத்தில் பிஎட் தேர்ச்சியை பதிவு செய்ய மாணவ, மாணவிகள் கடந்த 2 நாட்களாக முயன்றனர். ஆனால் வேலைவாய்ப்பு துறையின் இணைய தளம் செயலிழந்து காணப்பட்டது. இதனால் பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. மாணவ& மாணவிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

கடலூர் மாவட்டத்தில் 2,600 பேர் தேர்வெழுதி சான்றிதழ் பெற்றனர். பதிவு செய்ய கல்லூரிகளிலேயே ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் செயலிழந்த அரசு இணையதளத்தால் குழப்பத்திற்கு ஆளாகினர். சீனியாரிட்டி கிடைக்குமா?: அரசு அறிவிப்பால் எந்த பகுதியில் இருந்தும் ஆன்லைனில் பதிவு செய்யலாம் என்ற நிலையில் பிஎட் மாணவ& மாணவிகள் இருந்தனர். தற்பொழுது வேலைவாய்ப்பு துறையின் ஆன்லைன் பதிவு சிக்கலால் இதற்கு தடை ஏற்பட்டுள்ளது. 

இதனால் தங்கள் பகுதி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். மேலும் ஆன் லைனில் பதிவு செய்த அனைவரின் முன்னுரிமை பட்டியல் இன்று வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆன்லைன் பதிவு செயலிழப்பால் மாணவ& மாணவிகளுக்கு சீனியாரிட்டி வாய்ப்பு தவறிப் போயுள்ளது. விடுமுறை நாளான நேற்று வேலை வாய்ப்பு அலுவலகத்தின் அருகிலிருந்தவர்கள் நேரில் வந¢து பதிவு செய்துள்ளனர். ஆனால் தொலைவில் இருந்த மாணவர்கள் வந்து பதிவு செய்ய முடியவில்லை. இவர்கள் இன்று ஆன் லைனில் பதியும் போது ஒருநாள் பிந்தைய சான்றிதழ் கிடைக்கும் என மாணவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக