AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

சனி, 24 செப்டம்பர், 2011

மேற்கு நாடுகளுக்கு ஈரான் கண்டனம்: அமெரிக்கா வெளிநடப்பு


நியூயார்க்கில் ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்ற ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் சர்ச்சைக்குரிய விதத்தில் ஈரான் அதிபர் முகமது அஹமதி நிஜாத் பேசியதைத் தொடர்ந்
நியூயார்க், செப். 23: ஐ.நா. பொதுச் சபையில் வெள்ளிக்கிழமை பங்கேற்றுப் பேசிய ஈரான் அதிபர் முகமது அஹமதி நிஜாத், மேற்கத்திய நாடுகளை கடுமையாகச் சாடினார். அந்நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு தருவதைக் குறை கூறி அவர் அவ்வாறு சாடினார். இதைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகள் பொதுச் சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
 ஹிட்லர் செய்த கொடுமைகளை காரணமாக வைத்துக்கொண்டு இஸ்ரேலுக்கு மேற்கு நாடுகள் அசைக்கமுடியாத ஆதரவு தந்து வருகின்றன. அதேநேரத்தில் அவை பாலஸ்தீன மக்களின் மீதான ஒடுக்குமுறைக்குத் துணை போகின்றன என்று முகமது அஹமதி நிஜாத் கூறினார்.
 தன்னுடைய உரையில், அமெரிக்காவில் நடத்தப்பட்ட செப்டம்பர் 11 தாக்குதல் சந்தேகத்திற்கிடமானது என்றும் இச்சம்பவத்துக்கு காரணமானவர் என்று கூறப்பட்ட ஒசாமா பின் லேடனை நீதியின் முன் நிறுத்தாமல், அவரைக் கொன்று கடலில் தூக்கி எறிந்தது ஏன் என்றும் முகமது அஹமதி நிஜாத் கேள்வி எழுப்பினார்.
 தங்கள் ஆதாயம், ஏகாதிபத்தியம் ஆகிய இலக்குகளை நிலைநாட்ட மேற்கு நாடுகள் போலித்தனமாகவும் ஏமாற்றுவித்தையிலும் ஈடுபட்டு வருகின்றன. ராணுவத் தலையீடுகள் மூலம் பல்வேறு நாடுகளின் அடிப்படைக் கட்டுமானத்தை சீர்குலைப்பதுடன் அந்நாடுகளை பலவீனப்படுத்துகின்றன. தங்களையே சார்ந்திருக்க வைப்பதன் மூலம் அந்நாடுகளின் வளங்களை மேற்கு நாடுகள் கொள்ளையடித்து வருகின்றன என நிஜாத் கண்டித்தார்.
 நிஜாத் உரையைக் கேட்டுக்கொண்டிருந்த அமெரிக்க பிரதிநிதி பாதியிலேயே எழுந்து வெளியே சென்றார். இதைத் தொடர்ந்து ஐரோப்பிய யூனியனின் 27 நாட்டுப் பிரதிநிதிகளும் ஒட்டுமொத்தமாக வெளியேறினர்.
 அவரது உரை குறித்துக் கருத்துத் தெரிவித்த அமெரிக்கப் பிரதிநிதி மார்க் கோர்ன்பிளெü, தன்னுடைய மக்கள் பற்றிப் பேசுவதற்குக் கிடைத்த அருமையான வாய்ப்பை நிஜாத் கோட்டைவிட்டுவிட்டார். இழிவான சதிக் கோட்பாடுகளை ஐ.நா. பொதுச் சபையில் அவர் அரங்கேற்றியிருக்கிறார் என்று கூறினார்.
 அமெரிக்காவின் முன்னாள் தூதர் ஜான் போல்டன், ஈரான் மக்கள் கொடுமைப்படுத்தப் படுவதையும் கொல்லப்படுவதையும் தடுக்க அமெரிக்கா தவறி விட்டது என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக