AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

புதன், 21 செப்டம்பர், 2011

கோவை! முஸ்லிம்கள் அதிகமாக வாழும் வார்டுகளை தனி வார்டாக அறிவிக்கப்பட்டுள்ளதை கண்டித்து த மு மு க ஆர்பாட்டம்.

கோவை,செப்டம்பர் 21 : உட்பட்ட குறிச்சி நகராட்சிக்கு வார்டுகளான 1,2,3,6 இந்த நான்கு வார்டுகளும் மற்றும் குனியமுத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளான, 1,2,21 இந்த மூன்று வார்டுகளும்,மாநகராட்சியால் மறுசீரமைக்கப்பட்டு மாநகராட்சியின் 87 மற்றும் 95 இரண்டு வார்டுகளாக அறிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு வார்டுகளில் தனி வார்டாகவும், பெண்கள் வார்டாகவும் மாநகராட்சி நிர்வாகம் மாற்றிஅமைத்துள்ளது. இந்த இரண்டு வார்டுகளில் சிறுப்பான்மையினரான இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசித்து வரும் பகுதிகள் என்பதாலும், கோவை மாநகராட்சி மாமன்றத்தில் சிறுபான்மை மக்களின் குரல் வலையை நசுக்கும் விதமாகவும்.பேச்சுரிமையை பறிக்கும் விதமாகவும் மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அரசு அதிகாரிகளின் இந்த துரோக சதி செயலை கண்டித்தும். மாவட்ட ஆட்சித்தலைவர் இதுவரை எந்த வித பதிலும் அளிக்காமல் மவுனம் கடைபிடிப்பதை கண்டித்தும்மீண்டும் 87,மற்றும் 95 வது வார்டுகளை பொது வார்டுகளாக அறிவிக்க கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் தமுமுக மாநில செயலாளர் இ. உமர் தலைமையில் தமுமுக மாநில துனைச் செயலாளர் கோவை சையது கண்டன உரை நிகழ்த்தினர் . இதில் தமுமுக மாவட்ட தலைவர் பர்க்கத் அலி, மமக மாவட்ட செயலாளர் சுல்தான்அமீர், மாவட்ட பெருளாளர் அப்பாஸ், மற்றும் நிர்வாகிகள் சாகுல் ஹமீது, அப்பாஸ், சுலைமான், ஜபார், மற்றும்
ஜமாத் நிர்வாகிகள் , சமுதாய அமைப்புகள், குடியிருப்போர் நலச் சங்கத்தை சேர்ந்தவர்கள் பெண்கள் உள்பட 500 பேர்கள் கலந்து கொண்டனர...

நன்றி- மீடிய வாய்ஸ் டிவி 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக