AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

புதன், 21 செப்டம்பர், 2011

தூங்கினால் எடை கூடும்...


உலக அளவில் உடல் பருமனை அதிகரிக்கும் பொதுவான 2 விஷயங்கள் டி.வி.யும், நொறுக்குத் தீனியும் என்கிறது அமெரிக்காவில் நடத்தப்பட்ட புதிய ஆய்வு. எண்ணெயில் பொரித்தெடுக்கும் உருளைக் கிழங்கு வறுவல் நாக்கை சுண்டியிழுக்கும் சுவை உடையதுதான்.
 
ஆனால் இதைச் சுவைப்பதால் உடலுக்கு ஏற்படும் கெடுதல் சிறிதல்ல என்கிறது இந்த ஆய்வு. இதுபோன்ற எண்ணெய் உணவுகள் அதிகப்படியான கொழுப்பு சத்தை உடலில் சேர்த்துவிடும் என்பது பல ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது. ஆனால் இப்படி சேரும் கொழுப்புகள் எளிதில் கரைவதில்லை என்பதுதான் லேட்டஸ்ட் தகவல்.
 
எண்ணெயில் பொரித்தெடுக்கப்படும் உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வரும் இளைஞர்களுக்கு நான்கு வருடத்தில் அதிகப்படியாக 1.5 கிலோ எடை அதிகரிக்கிறதாம். ஒரே இடத்தில் உட்கார்ந்தபடியே பலமணி நேரம் வேலை பார்ப்பது, அதிக நேரம் டி.வி. பார்ப்பது, சிகரெட் புகைப்பது, மதுபானம் அருந்துவது ஆகியவையும் உடலைப் பருமனாக்குகிறது என்பது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
 
"உருளைக் கிழங்கு உணவுகளை வெகுவாக குறைத்துக் கொண்டு, காய்கறிகள், நவதானியங்கள், பழவகைகளை அதிகமாக சாப்பிடுவதன் மூலம் உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள முடியும்'' என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஆறுமணி நேரத்துக்கு குறைவாக தூங்கினாலும் அல்லது எட்டு மணி நேரத்துக்கு அதிகமாக தூங்கினாலும் உடல் எடை அதிகரிக்குமாம்.
 
உடல் நலம் சீராக இருக்க சின்னச்சின்ன விஷயங்களிலும் கவனமா இருங்க என்கிறது ஆய்வு!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக