AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

ஞாயிறு, 10 மார்ச், 2013

காவிரி நீர் வரத்து அதிகரிப்பால் வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு தண்ணீர் அனுப்ப ஏற்பாடு: அமைச்சர்கள் ஆய்வு

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் உள்ள வீராணம் ஏரி கடந்த ஒரு மாதமாக வறண்டு கிடந்தது. கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு காவிரி நீர் வருகிறது. அங்கிருந்து கல்லணைக்கு 250 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதிலிருந்து கீழ் அணைக்கு 250 கன அடி தண்ணீர் வந்து சேர்ந்தது. 

கீழ் அணையிலிருந்து வீராணம் ஏரிக்கு நேற்று காலை 1,500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதில் 945 கன அடி தண்ணீர் வீராணம் ஏரிக்கு வந்து சேர்ந்தது. இன்றும் அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 

வீராணம் ஏரியின் மொத்த கொள்ளவு 47.50 அடி ஆகும். தற்போது அணையில் 40-40 அடி தண்ணீர் உள்ளது. வீராணம் ஏரியில் தண்ணீர் குறைந்ததையட்டி சென்னைக்கு குடிநீருக்கு தண்ணீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது. 


வீராணம் ஏரியில் 41 அடி தண்ணீர் நிரம்பி விட்டால் சென்னைக்கு குடிநீர் அனுப்பப்படலாம் என்று கூறப்படுகிறது. சென்னையில் தற்போது குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. எனவே வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்ப ஏற்பாடு நடைபெறுகிறது. 

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ராமலிங்கம், சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாடு துறை அமைச்சர் எம்.சி.சம்பத் ஆகியோர் இன்று வீராணம் ஏரியை பார்வையிட்டார்கள். அருகில் உள்ள பெருமாள் ஏரியையும் அவர்கள் பார்வையிட்டார்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக