AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

புதன், 20 பிப்ரவரி, 2013

சவூதி வரலாற்றில் முதல்முறையாக... 'ஷுரா' ஆலோசனை குழு உறுப்பினர்களாக 30 பெண்கள் பதிவேயற்பு


சவூதி அரேபியாவில் மன்னரின் ஆட்சி முறை குறித்து ஆலோசனை வழங்கும் ஷுரா குழுவில் முதல்முறையாக 30 பெண்கள் இடம்பெற்றுள்ளனர். 30 பெண்கள் உள்பட 150 பேர் கொண்ட ஷுரா குழு நேற்று மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜீஸ் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர்.
சவூதி அரேபியா ஷரியத் சட்டங்களை கடுமையாக பின்பற்றும் நாடு. இந்நிலையில் அந்நாட்டை ஆட்சி செய்யும் மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜீஸ் ஆட்சி முறையில் சில திருத்தங்களை கொண்டு வந்து கொண்டிருக்கிறார். கடந்த 2005ம் ஆண்டு சவூதி வரலாற்றிலேயே முதல் முறையாக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. ஆனால் அதில் வாக்களிக்க பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 2011ம் ஆண்டு நடந்த தேர்தலில் பெண்களும் வாக்களிக்க வகை செய்யும் சட்டம் கொண்டு வரப்பட்டது. மேலும் வரும் 2015ம் ஆண்டு நடக்கும் உள்ளாட்சி தேர்தலில் பெண்கள் போட்டியிடவும் மன்னர் அனுமதி அளித்துள்ளார்.
சவூதியில் மன்னரின் ஆட்சி முறை குறித்து ஆலோசனை வழங்க 150 உறுப்பினர்களைக் கொண்ட ஷுரா குழு உள்ளது. இந்த குழுவில் இதுவரை பெண்கள் இடம்பெற்றதே இல்லை. இந்நிலையில் இக்குழுவில் பெண்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது. இதையடுத்து இக்குழுவில் 30 பெண்கள் சேர்க்கப்பட்டனர்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஷுரா குழுவினர் நேற்று மன்னர் முன்பு பதவியேற்றுக் கொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக