AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

ஞாயிறு, 20 ஜனவரி, 2013

எழுச்சியுடன் நடைபெற்ற மமக வின் பேச்சாளர் பயிற்சி முகாம்


மமக வின் சார்பில் பேசாலர்களுக்கான பயிற்சி முகாம் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் 19-01-2013 அன்று நடைபெற்றது.
இதில் பிரபல இடதுசாரி - முற்போக்கு சிந்தனையாளர் பேராசிரியர் அருணன் அவர்கள் "பேச்சாளராக உருவாவது எப்படி?" என்ற தலைப்பில் வகுப்பெடுத்தார்.
யாரும் எதிர்பாராத விதமாக கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்ட குழுவின் தலைவர் சுப. உதயகுமார் அவர்கள் இடிந்தகரை கிராமத்தில் இருந்தவாறே வீடியோ CONFERENCE மூலம் வகுப்பெடுத்து எல்லோரையும் உற்சாகப்படுத்தினார். இவரது உரையை எதிர்பார்க்காத பங்கேற்பாளர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர்.
பேராசிரியர். எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் POWER POINT மூலம் வகுப்பெடுத்தார். அதில் பேரறிஞர் அண்ணா, வைகோ, தமிழருவி மணியன், நாஞ்சில் சம்பத் ஆகியோரின் உரைகள் ஒளிபரப்பு செய்யப்பட்டு அதுகுறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.



பேரா. ஹாஜா கனி அவர்கள் இலக்கண பிழையின்றி பேசுவது எப்படி என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அப்துல் சமது அவர்கள் சிறந்த புத்தகங்களை வாசிப்பது மூலம் ஏற்படும் நன்மைகள் குறித்து வகுப்பெடுத்தார் .

இறுதியாக பொதுச்செயலாளர் தமிமின் அன்சாரி அவர்கள் "எதையெல்லாம் பேசக்கூடாது? எப்படி எல்லாம் பேச வேண்டும்? என்ற தலைப்பில் நிறைவுரை ஆற்றினார்.

இறுதியாக பேசாலர்களுக்கான சிறப்பு கையேடு வந்திருந்த அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டது.
பேச்சாளர்கள் வாசிக்க வேண்டிய தேர்வு செய்யப்பட புத்தகங்களின் தலைப்புகளும் தொகுத்து வழங்கப்பட்டது.

இம்முகாமில் பங்கேற்ற அனைவரும் அரசியல் தெளிவு பெற்று சரியான வழிகாட்டலை பெற்ற திருப்தியோடு புறப்பட்டனர்.

பல்வேறு சமூகங்களை சார்ந்த கட்சிகளில் பேச்சாளர்களை ஒருங்கிணைத்து அவர்களை நேரிப்படுதியதன் மூலம் மமகவின் புதிய பிரச்சாரப்படை புறப்பட்டு இருக்கிறது.
இது மமக வின் அரசியல் பயணத்தில் மற்றுமொரு முன்னேற்றமாகும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக