AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

திங்கள், 14 ஜனவரி, 2013

ரிசானாவின் மரண தண்டனை -சவூதி அரசு விளக்கம்!



ரியாத்: ரிசானா நபீக்கிற்கு நிறைவேற்றப் பட்ட மரண தண்டனை சவூதி அரசின் சட்டத்திற்க்கு உட்பட்டே வழங்கப் பட்டது என்று சவூதி அரசாங்கம் விளக்கம் அளித்துள்ளது.
இலங்கையை சேர்ந்த ரிசானா நபீக்கிற்கு சவூதி அரேபியாவில் நான்கு மாத குழந்தை ஒன்றை பால் ஊட்டும் போது கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இந்த தண்டனை குறித்து உலக நாடுகள் கண்டனம் வெளியிட்டுள்ளமை தொடர்பாக சவூதி அரேபியா தமது விளக்கத்தை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து சவூதி அரசாங்கப் பேச்சாளர் குறிப்பிடுகையில், "கடவுச்சீட்டின்படி ரிசானா கொலையை மேற்கொண்ட போது அவருக்கு 21 வயதாகும். எனவே அவர் 17 வயதானவர் என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது. அதாவது  1988ஆம் ஆண்டு பிறந்த ரிசானா சவுதிக்கு செல்லும் போது 1982 ஆம் ஆண்டு பிறந்ததாக பிறப்பு சான்றிதழ் போலியாக எடுக்கப்பட்டு கடவுச் சீட்டில் ரிசானாவின் வயது 21 என குறிப்பிடப்பட்டிருந்ததாகவும், அதன்படியே ரிசானாவுக்கு தண்டனை வழங்கப்பட்டது.

மேலும் அத்துடன், சிறுமிகள் பணிக்கு அமர்த்தப்படுவதை சவூதி அரேபியா ஏற்றுக்கொள்வதில்லை, சவூதி அரசாங்கம், ரிசானாவை மரண தண்டனையிலிருந்து விடுவிக்க, இறந்துபோன குழந்தையின் பெற்றோரை இணங்கச்செய்வதற்கு முயற்சிகளை மேற்கொண்டது. எனினும் அவர்கள் ரிசானாவை மன்னிக்க வாய்ப்பில்லை என்று அறிவித்து விட்டனர். இதன் அடிப்படையிலேயே இந்த தண்டனை வழங்கப் பட்டது
இந்தநிலையில் சவூதி அரேபியா அனைத்து விதமான மனித உரிமைகளையும் மதிக்கிறது. எனினும் தமது நாட்டின் நீதித்துறையில் எவரும் தலையிடுவதை ஏற்கமுடியாது" என்று சவூதி அரசாங்கத்தின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக