AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

வியாழன், 31 ஜனவரி, 2013

ரூ.2015 கோடியில் மேம்படுத்தப்பட்ட சென்னை விமான நிலைய முனையங்கள் இன்று திறப்பு

சென்னை : சென்னை விமானநிலைய உள்நாட்டு மற்றும் சர்வதேச முனையங்கள் புதுப்பிக்கப்பட்டு, அதோடு ஓடுபாதையும் மேம்படுத்தப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடக்கிறது. இதுகுறித்து இந்திய விமான நிலைய ஆணைய தலைவர் அகர்வால் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை விமான நிலையம் விரிவுபடுத்தி, புதுப்பிக்கும் பணி 2008 நவம்பரில் தொடங்கியது. 

ரூ. 1808 கோடியில் தொடங்கப்பட்ட பணி, 36 மாதங்களில் முடிந்திருக்க வேண்டும். மின்தட்டுப்பாடு, கட்டுமான பொருள் விலையேற்றம், நிலங்கள் கையகப்படுத்துவதில் தடங்கலால் தாமதமாகி திட்ட செலவு  ரூ. 2015 கோடியாகிவிட்டது. இந்த புதிய முனையத்தை 31ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி திறந்து வைக்கிறார். எனினும் பயன்பாட்டுக்கு வருவதற்கு ஓரிரு மாதம் ஆகலாம். 


அடுத்த சில ஆண்டுகளில் இடநெருக்கடி ஏற்படும். எனவே, ஸ்ரீபெரும்புதூரில் அதி நவீன புதிய விமான நிலையம் அமைப்பதுதான் நிரந்தர தீர்வு. அதற்கான ஆய்வு அறிக்கையை மாநில அரசிடம் ஏற்கனவே அளித்து விட்டோம். மாநில அரசிடம் இருந்து முறையான அறிவிப்பு எதுவும் இல்லாததால் அந்த பணி தாமதமாகிறது. 
மேலும் தற்போதைய விமான நிலையத்தை முழுவதுமாக தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டம் இல்லை. அதே நேரத்தில் கார் பார்க்கிங் உள்பட ஒரு சில பகுதிகளின் பராமரிப்பு பணியை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டம் உள்ளது. விமான நிலையங்களுக்கு பெயர் சூட்டுவது பற்றி மத்திய அமைச்சரவைதான் முடிவு எடுக்க வேண்டுமே தவிர நாங்கள் எந்த முடிவும் எடுக்க முடியாது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக