AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

செவ்வாய், 22 ஜனவரி, 2013

நாடு முழுவதும் அறிமுகம் அவசர உதவிக்கு பெண்கள் 181ஐ டயல் செய்யலாம்

புதுடெல்லி : பெண்களின் அவசர உதவிக்கு டெல்லியில் அறிமுகப்படுத்தப்பட்ட 181 போன் எண் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என தொலை தொடர்புத்துறை அமைச் சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார். மருத்துவ மாணவி பலாத்கார சம்பவத்துக்கு பின், டெல்லியில் பெண்களின் அவசர உதவிக்கு மூன்று இலக்க போன் எண்ணை அறிமுகம் செய்யும்படி முதல்வர் ஷீலா தீட்சித் வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து 167 என்ற எண்ணை தொலை தொடர்புத்துறை அறிமுகம் செய்தது. பின் அது எளிதாக ஞாபகம் வைத்திருக்கும் வகையில் 181 என மாற்றப்பட்டது.


இந்நிலை யில் இது குறித்து டெல்லியில் நேற்று பேட்டியளித்த மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபல், ‘‘அனைத்து மாநிலங்களிலும் பெண்களின் அவசர உதவிக்கு 181 என்ற எண்ணை தொலை தொடர்புத்துறை வழங்கும்’’ என்றார். இது செயல்படும் விதம் குறித்து தொலை தொடர்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘பெண்களின் அவசர உதவிக்கு 181 என்ற மூன்று இலக்கு எண்ணை தொலை தொடர்புத்துறை ஒதுக்கியுள்ளது.

இது குறித்து அனைத்து மாநில முதல்வர்களுக்கும் தொலை தொடர்புத்துறை அமைச்சர் கடிதம் எழுதுவார். இந்த எண் ஒதுக்கீடு செய்யப்பட்ட பின், அனைத்து மாநிலங்களும் தனியாக கால் சென்டர் அமைக்க வேண்டும். அப்போதுதான் இந்த எண்ணை நாடு முழுவதும் பயன்படுத்த முடியும்’’ என்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக