AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

திங்கள், 24 டிசம்பர், 2012

அயோத்தியில் பாபர் மஸ்ஜிதை,இடிப்பதற்கு காரணமான அத்வானி முரளி மனோகர் ஜோஷி போன்ரவர்கள் அதை முன்னின்று கட்டித்தர முன் வர வேண்டும் . – பேராசிரியர் .கே.எம்.காதிர் மொஹிதீன்


23.12.12 லால்பேட்டையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழகத் தலைவர் பேராசிரியர் .கே.எம்.காதிர் மொஹிதீன் நிருபர்களிடம் கூறும்போது ,
டெல்லியில் இடிக்கப்பட்ட பள்ளிவாசல் மீண்டும் கட்டப்படும் என்று அறிவித்த டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் போன்று அயோத்தியில் இடிக்கப்பட்ட பாபர் மஸ்ஜிதை,இடிப்பதற்கு காரணமான அத்வானி முரளி மனோகர் ஜோஷி போன்றவர்கள் அதை முன்னின்று கட்டித்தர முன் வர வேண்டும் .
இன்று இளம்பெண்கள் கற்பழிகப்படுவது அதிகரித்துள்ளது வேதனையளிக்கிறது,கற்பழிப்புக்கு தூக்கு தண்டனை என்று மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தால் அதை நாங்கள் முதலில் வரவேற்போம்.
கற்பழிப்புக்குரிய இஸ்லாமிய தண்டனையை நாங்கள் சொன்னபோது அதை காட்டுமிராண்டித் தனம் என்று சொன்னார்கள் பலர்.ஆனால் இன்று கற்பழிப்பவனுக்கு மரண தண்டனை தர வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளும் வலியுறுத்துவதை பார்க்கும் போது நாங்கள் சொன்ன கருத்துக்கு வலிமை கிடைத்திருப்பதாகவே கருதுகிறோம்.
மதவாத சக்தியான ஜெயலலிதாவிடம் இருந்து எந்த நன்மையும் சமுதாயத்திற்கு விளையப்போவதில்லை என்பதை அடிக்கடி கூறி வருகிறோம்.ஆனால் சிலர் அதை மறைக்க முயல்வதை வேடிக்கையாகவே கருதுகிறேன்.
மேலும்,உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் கோவை சிறைவாசி அபுதாகிரை நீதிமன்ற உத்தரவு வந்தபின்பும் பரோலில் விட மறுக்கும் தமிழக அரசை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வன்மையாக கண்டிக்கிறது .
காவேரி தண்ணீர் பிரச்சனைக்கு இரு மாநில முதல்வர்கள் மக்களின் நலன் கருதி பேசினால் தான் நல்ல முடிவு கிடைக்கும் என்றும் கூறினார்.
பேட்டியின்போது மாநில துணைத் தலைவர் தளபதி ஏ.ஷஃபீகுர் ரஹ்மான், கடலூர் மாவட்டத் தலைவர் கே.ஏ.அமானுல்லாஹ்,செயலாளர் ஏ.ஷுக்கூர், லால்பேட்டை நகர தலைவர் கே.ஏ.அபுசுஹுது,செயலாளர் எம்.ஓ.அப்துல் அலி, மாவட்ட துணைத் தலைவர் ஏ.ஆர்.அப்துல் ரஷீத்,உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக