AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

சனி, 10 நவம்பர், 2012

சிம் கார்டு வாங்க போலியான ஆவணம் தருவார்கள் மீது போலீஸ் நடவடிக்கை...

புதுடெல்லி: செல்போன், சிம் கார்டு வாங்க போலியான ஆவணம் தருவார்கள் மீது கடும் நடடிவக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. செல்போன் மற்றும் சிம் கார்டு வாங்க மத்ததிய அரசு புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. போலியான ஆவணங்களை கொடுத்து. சேல்போன் சேவை நிறுவனங்களிலிருந்து, சிம் கார்டு பெவதை கட்டுபடுத்தும் வகையில், புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிட்டுள்ளது. இதன்படி, ப்ரீபெய்டு, போஸ்ட் பெய்டு செல்போன் இணைப்பு பெற தவறான தகவல்களை அளிக்கும் வாடிக்கையாளர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 


இதற்கு செல்போன் நிறுவனங்களும் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. சிம் கார்டுகளை விற்பனை செய்யும் போது விண்ணப்பதாரின் புகைப்படம், ஆவணங்களை சரிபார்க்க வேண்டும் என்றும், போலியான ஆவணங்களை கொடுத்து யாராவது சேல்போன் இணைப்பு பெற்றால் 15 நாட்களில் சேல்போன் சேவை நிறுவனம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக