AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

புதன், 21 நவம்பர், 2012

கருணை மனு நிராகரிப்பு – கசாப்பிற்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றம்!

மும்பை:மும்பை தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்ட அஜ்மல் கசாப்பின் கருணை மனுவை குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி நிராகரித்துவிட்டதை தொடர்ந்து, கசாப்பிற்கு இன்று காலை 7.30 மணிக்கு தூக்குத் தண்டனை  நிறைவேற்றப்பட்டது. இதனை மஹராஷ்டிர உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர். இதில் உயிருடன் பிடிபட்ட அஜ்மல் கசாப்புக்கு மும்பை உயர்நீதிமன்றம் தூக்குத் தூண்டனை வழங்கியது.  இதனை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது.
இதன் தொடர்ச்சியாக,  அஜ்மல் கசாப் தரப்பில் கடந்த செப்டம்பர் மாதம் கருணை மனு தாக்கல்  செய்யப்பட்டது.  இதை மஹராஷ்டிர அரசின் பரிந்துரையின் பேரில் மத்திய உள்துறை  அமைச்சகம் நிராகரித்தது. மேலும்,  கசாப்பின் கருணை மனுவை தள்ளுபடி செய்யும்படி, குடியரசு தலைவருக்கும் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் கசாப்பின் கருணை மனுவை குடியரசு தலைவர் பிராணாப் முகர்ஜியும் நிராகரித்தார்.
இதனையடுத்து, புனேயில் உள்ள ஏர்வாடா சிறையில்  இன்று காலை 7.30 மணிக்கு கசாப்பிற்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த தகவலை  மஹராஷ்டிர மாநில உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
கசாப் தூக்கிலிடப்பட்டாலும் மும்பை தாக்குதலின் போது, ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் பல்வேறு தீவிரவாத செயல்களை வெளிக்கொணர்ந்த ஹேமந்த் கர்கரே கொல்லப்பட்ட மர்மம் மட்டும் இன்னும் விலகவில்லை.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக