AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

வியாழன், 29 நவம்பர், 2012

ஆஸிஃப் இப்ராஹீம்: இந்தியாவின் 125 வருடகால வரலாற்றில் உளவுத்துறையின் தலைவராக முதல் முஸ்லிம்!

புதுடெல்லி:இண்டலிஜன்ஸ் பீரோவின்(ஐ.பி) தலைமை இயக்குநராக செய்யத் ஆஸிஃப் இப்ராஹீம் பதவி யேற்கும்போது திருத்தப்படுவது இந்தியாவின் 125 ஆண்டுகால வரலாறாகும். பிரிட்டீஷ் ஆட்சிகாலத்தில் இருந்தே தொடரும் இந்தியாவின் மிகவும் பழமை வாய்ந்த உளவுத்துறையான ஐ.பியின் முதன் முதலாக ஒரு முஸ்லிம் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார். நான்கு சீனியர் அதிகாரிகளையும் கடந்து ஆஸிஃப் இப்ராஹீம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இப்பதவியை ஏற்கவுள்ளார்.
1953-ஆம் ஆண்டு செப்டம்பர் 28-ஆம் தேதி கான்பூரில் பிறந்த ஆஸிஃப் இப்ராஹீம், 1977 பேட்சில் ஐ.பி.எஸ் அதிகாரி ஆவார். மத்திய பிரதேச
மாநிலத்தில் நியமிக்கப்பட்ட ஆஸிஃப், குவாலியர் எஸ்.பியாக சம்பல் பகுதியில் தனது சேவையை தொடர்ந்தார். ஆஸிஃப், நீதியும், நேர்மையும் கொண்ட அதிகாரி என்று அவருடன் பணியாற்றியவர்கள் கூறுகின்றனர்.
1980களில் மத்திய அரசின் டெபுட்டேசனில் டெல்லிக்கு வந்த ஆஸிஃப், எப்பொழுது ஐ.பியில் சேர்ந்தார் என்பது தெரியவில்லை. முஸ்லிம்களையும், சீக்கியர்களையும் ஐ.பி புறக்கணிப்பதாக பல ஆண்டுகளாகவே குற்றச்சாட்டு எழுந்துவருகிறது. 1993-ஆம் ஆண்டு வரை ஐ.பியிலும், ரா விலும் ஒரு முஸ்லிம் கூட அதிகாரியாக இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் உறுதிச் செய்திருந்தனர். 1992-ஆம் ஆண்டின் இறுதியில் அல்லது 1993-ஆம் ஆண்டின் துவக்கத்தில் ஆஸிஃப், ஐ.பியில் சேர்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஜாவீத் கிலானி என்பவர் மட்டுமே அன்று முஸ்லிமாக ஆஸிஃபுடன் பணியாற்றியுள்ளார்.
கஷ்மீரில் மோதல் தீவிரமடைந்திருந்த காலக்கட்டத்தில் ஆஸிஃப், ஐ.பியின் கஷ்மீர் ஆபரேசன் டெஸ்கில் பணியாற்றியுள்ளார். 2007-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை லண்டனில் இந்திய ஹைக்கமிஷனில் பணியாற்றினார். ஆனால், லண்டனில் அவரது பதவி லண்டன் ஐ.பி ஸ்டேசன் சீஃப் என்பதாகும் என்று த ஹிந்து பத்திரிகை கூறுகிறது. உள்துறை உளவுத்துறையான ஐ.பிக்கு லண்டனில் எதற்கு மையம்? என்பது மர்மமாகவே உள்ளது. ஐ.பி அதிகாரியாக இல்லாவிட்டால் பின்னர் அவர் எப்படி மீண்டும் ஐ.பியில் இணைந்தார்? என்பதும் சந்தேகத்திற்கிடமானது.
ஐ.பியில் இந்தியன் முஜாஹிதீனைக் குறித்து அதிகம் தெரிந்த அதிகாரி ஆஸிஃப் இப்ராஹீம் என்று த ஹிந்து கூறுகிறது. ஐ.பியின் கைப்பாவையே இந்தியன் முஜாஹிதீன் என்ற கருத்தும் நிலவுகிறது. 2007-ஆம் ஆண்டிற்கும், 2011-ஆம் ஆண்டிற்கும் இடையேத் தான் இந்தியன் முஜாஹிதீன் குறித்த செய்திகள் அதிகம் வெளியாகின. அக்காலக்கட்டத்தில்தான் ஆஸிஃப் இப்ராஹீம், லண்டனில் பணியாற்றினார் என்பதும் கவனிக்கத்தக்கது. ஆஸிஃப் லண்டன் ஹைக்கமிஷனில் பணியாற்றினாரா? அல்லது ஐ.பியின் இந்தியன் முஜாஹிதீன் டெஸ்கில் சேவை புரிந்தாரா? என்பது சந்தேகத்திற்கிடமானதே!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக