AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

வியாழன், 18 அக்டோபர், 2012

இரவுநேர மின்வெட்டை கண்டித்து மெழுகுவர்த்தி, தீப்பந்தங்கள் ஏந்தி பொதுமக்கள் கண்டன போராட்டம்

புவனகிரி, : இரவுநேர மின்வெட்டை கண்டித்து பரங்கிப்பேட்டையில் பொதுமக்கள் 300க்கும் மேற்பட்டோர் கைகளில் விளக்குகள், மெழுகுவர்த்திகள், தீப்பந்தங்கள் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பரங்கிப்பேட்டை நகரில் தினமும் சுமார் 15 மணி நேரம் முதல் 18 மணி நேரம் வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. காலையில் பள்ளி, வேலைக்கு செல்லும் நேரம், மதியம் சாப்பிட வரும் நேரம், மாலையில் படிக்கும் நேரம், இரவில் தூங்கும் நேரம் என்று எப்போதும் மின்தடை நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தொடர் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் பரங்கிப்பேட்டை பேரூராட்சி தலைவர் முகமதுயூனுஸ் தலைமையில், பரங்கிப்பேட்டை காவல்நிலையம் எதிரில் உள்ள பஸ் நிலையத்தில் கூடினார்கள். 
பின்னர் மின்வெட்டை கண்டித்து கைகளில் லாந்தர் விளக்குகள், மெழுகுவர்த்திகள், தீப்பந்தங்கள் ஆகியவற்றை பொதுமக்கள் ஏந்தி தமிழக அரசைக் கண்டித்து கோஷம் எழுப்பினர். தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டார்கள்.
இந்த போராட்டம் குறித்து பரங்கிப்பேட்டை பேரூராட்சி தலைவர் முகமதுயூனுஸ் கூறுகையில் ‘ஒட்டு மொத்தமாக மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆட்சியில் 2 மணி நேரம் மட்டுமே மின்வெட்டு இருந்தது. ஆனால் இன்று 18 மணி நேரம் வரை மின்சாரம் இல்லை. இதனால் குடிநீர் பிரச்னை உள்ளது. 
மருத்துவமனை, வணிக நிறுவனங்கள் இயங்க முடியவில்லை. அதனால் தமிழக அரசு வாக்களித்த மக்களின் கோரிக்கைகளை, கருத்துகளை கேட்டு நிறைவேற்றிட வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது’ என கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக