இந்த வருட ஹஜ் பயணத்தில் இனி ஹாஜிகள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்யலாம். இதனால் 25 லட்சம் மக்கள் ஒரே நேரத்தில் இடம் பெயரும் போது ஏற்படும் போக்கு வரத்து சிக்கல்களை எளிதாக்கலாம். குழந்தைகள், பெண்கள், வயதானவர்களுக்கு இந்த மெட்ரோ திட்டம் மிக உபயோகமாக இருக்கும். முன்பெல்லாம் ஹஜ் நாட்களில் ஒரு இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு வாகனத்தில் செல்ல 5 மணி நேரம் ஆறு மணி நேரம் கூட காத்திக்கிடக்க நேரும். தற்போதய மெட்ரோ பயணத்தால் அந்த சிரமங்கள் வெகு இலகுவாகும்.
ஒரு வார ஹஜ் கிரியைகளை முடிக்க நீங்கள் 250 ரியால் டிக்கெட் எடுத்து அதனை ஏழு நாட்களுக்கும் பயன் படுத்திக் கொள்ளலாம். மற்றொரு டிக்ககெட் 100 ரியால் பெறுமானமுள்ளது. இதனை ஹாஜிகள் நான்கு நாட்கள் மட்டுமே பயன் படுத்திக் கொள்ள முடியும். ஆங்கிலமும் அரபியும் தெரியாமல் ஹாஜிகள் சிரமப்படக் கூடாது என்பதற்காக ரயிலில் பயணிப்போருக்கு வசதியாக அவர்களின் பயணத்தை காட்டும் விதமாக மூன்று கலர்களில் கைகளில் கட்டிக் கொள்ள சில டேக்கள் தருவார்கள். ஹாஜிகளை அழைத்து வந்த வழிகாட்டிகள் அதன் பயன்களை ஹாஜிகளுக்கு விளக்கிச் சொல்வார்கள். இதனால் ஹாஜிகள் சரியான இடத்தில் ஏறி இறங்க வசதியாக இருக்கும்..
6.7 பில்லியன் ரியால் (1.8 பில்லியன் டாலர்) இந்த ரயில்வே பணியை முடிக்க செலவாகியுள்ளது. இந்த வருடம் முதல் ஹாஜிகள் மெட்ரோ ரயிலின் பலனை அனுபவிக்கலாம் என்று ரயில்வே துறைக்கான செகரட்டரி ஜெய்னுல்லாபுதீன் தெரிவித்தார். இந்த மெட்ரோ பணிகளை சைனாவின் ஒரு கம்பெனி காண்ட்ராக்டை வென்றெடுத்து தற்போது பூர்த்தி செய்துள்ளது. 5000 பணியாளர்கள் இரவு பகல் பாராது பணி புரிந்து தற்போது பணியினை முடித்துள்ளார்கள். மன்னராட்சியோ, மக்களாட்சியோ, சர்வாதிகார ஆட்சியோ, ஜனாதிபதி ஆட்சியோ எதுவாக இருந்தாலும் தனது நாட்டு மக்களையும் உலக மக்களையும் சுபிட்சமாக வைத்திருக்க நினைக்கும் ஆட்சியாக இருந்தால் அது எந்த ஆட்சியாக இருந்தாலும் மக்கள் விரும்புவர் என்பதற்கு சவுதி ஆட்சி ஒரு உதாரணமாகத் திகழ்கிறது..
0 கருத்துகள்:
கருத்துரையிடுக