காட்டுமன்னார்கோவில், : காட்டுமன்னார்கோவில் வீராணம் ஏரியிலிருந்து மழைக் காலங்களில் வெள்ளியங்கால் ஓடை வழியாக உபரிநீர் வெளியேற்றப்படும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனிநபர் ஒருவர் வெள்ளியங்கால் ஓடை வழியே எள்ளேரி கிழக்கு அமைந்துள்ள இடத்தில் மண் எடுத்தார். இதில் பொதுப்பணித்துறை மண் எடுக்க கூடாது என்று தடுத்து நிறுத்தியது.
கனரக இயந்திரத்தின் மூலம் வெள்ளியங்கால் ஓடையில் குவிக்கப்பட்ட மண் அங்கேயே கிடந்தது. இந்நிலையில் நேற்று இந்த பகுதி ஊராட்சி தலைவர் வெள்ளியங்கால் ஓடையின் கரையை பலப்படுத்துவதற்காக குவிக்கப்பட்ட மண்ணை அப்புறப்படுத்தினார். இதுபற்றி பொதுப் பணி துறை உதவி பொறியாளரிடம் கேட்டபோது வெள்ளியங்கால் ஓடையில் மண் அள்ளுவது குற்ற மாகும். தற்போது மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் ஓடையில் அதிக அளவு தண்ணீர் செல்லும் போது குவிக்கப்பட்ட மண்ணால் கரை உடையும் அபாயம் ஏற் படும். இதை கருத்தில் கொண்டே தனிநபர் மூலம் மண்ணை கொண்டு கரைகளை பலப்படுத்தி வருவதாக தெரிவித்தார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக